Published : 18 Mar 2019 02:13 PM
Last Updated : 18 Mar 2019 02:13 PM
சமூக வலைதளங்களில் ஐபிஎஸ் அதிகாரி போல உடை அணிந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்ததோடு அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூபாய் 1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட ஏமாற்றுப் பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் தெரிவித்ததாவது:
''புதுடெல்லியில் தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்டு ஒரு இளைஞர் மோசடிகளில் ஈடுபட்டு வந்தார். அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள படங்களில் ஐபிஎஸ் உடைகளில் போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்றும் பொய்யாக வலைதளப் பக்கத்தில் உள்ள சுயவிவரப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.இவர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இவர் வழக்கமாக செல்லும் ஜிம் மையம் ஒன்றில் அங்கு வந்த பெண்ணிடம் ஒரு நல்ல அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூ.1 லட்சம் ஏமாற்றி வாங்கியுள்ளார்.
இவரிடம் ஒரு லட்ச ரூபாய் பறிகொடுத்த அப்பெண் அளித்த புகாரின் பேரில் அந்நபர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
போலி ஐபிஎஸ் அதிகாரியாக வலம்வந்த இந்நபர் இதேபோன்ற ஒரு வழக்கில் கடந்த 2013லும் கைது செய்யப்பட்டார்''.
இவ்வாறு டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT