Published : 02 Mar 2019 08:13 AM
Last Updated : 02 Mar 2019 08:13 AM
பாகிஸ்தானில் அபிநந்தன் சிக்க காரணமாக இருந்த மிக்-21 போர் விமானம் 1966-ல் தயாரிக்கப்பட் டது. இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதால் அது ‘பறக்கும் சவப்பெட்டி’ என்றழைக்கப்படு கிறது.
கடந்த 1966-ம் ஆண்டில் ரஷ்யா விடம் இருந்த வாங்கப்பட்டது மிக்-21 ரக போர் விமானங்கள். அப்போது உலகின் தலைசிறந்ததாகவும் பெருமை வாய்ந்ததாகவும் அமைந்திருந்தன. பிறகு காலப் போக்கில் நவீன ரக குண்டுகளும், அதற்கான எலக்ட்ரானிக் கருவி களும் மிக்-21 விமானத்திற்கு முழுமையாகப் பொருந்தவில்லை. இதன் பழமையான தொழில்நுட்பம் உள்ளிட்டப் பல காரணங்களால பலசமயம் மிக்-21 விமானத்தில் கோளாறுகள் ஏற்பட்டன. நவீன ரக குண்டுகளை அதில் நிரப்பும் போது தொழில்நுட்பக் கோளாறு களும் ஏற்பட்டன. இதனால், அவற்றின் விமானிகள் பலியாவ தும், உயிர் பிழைப்பதும் அதில் ஏற்படும் கோளாறுகளின் வகையை பொறுத்தது என்றானது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற ஜூனியர் வாரண்ட் அதிகாரியான எஸ்.வரதராஜன் கூறும்போது, ‘‘பறக்கும் நிலையில் மிக்-21 இஞ்சின் திடீர் என அணைந்தால் விமானியின் அதிவேக செயல்திறமையால் தன் இருக்கையின் ஒரு பொத்தானை அழுத்துவார். இதில், விமானத்தின் மேல்புறக் கதவு திறந்து அதில் தனது இருக்கையுடன் விமானி எகிறி வெளியேறி விடுவார். இந்த வகை போர்விமானம், பயிற்சியின் போது சிலசமயம் விபத்துக் குள்ளாகி விடுகிறது. இதன் காரணமாக அதற்கு ராணுவத் தினர் ‘பறக்கும் சவப்பெட்டி’ எனவும், ‘விதவை தயாரிப்பாளர்’ என்றும் பெயரிட்டு அழைக்கின் றனர். மிக்-21 விமானம் விபத்துக்குள்ளானால் ராணுவத்தில் பல கோடி ரூபாய் வீண் எனப் பேச்சு எழுகிறதே தவிர அதில் பலியான விமானியின் உயிர் பற்றி கவலைப்படுவோர் மிகவும் குறைவு’’ எனத் தெரிவித்தார்.
மிக்-21 ரக போர்விமான விபத் தால் பல திறமைவாய்ந்த போர் விமானிகளும், பொதுமக்களும் பரிதாபமாகப் பலியாகி உள்ளனர். இந்த மிக்-21 குறித்த ஒரு கேள்விக்கு 2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்ச ரான ஏ.கே.அந்தோணி மாநிலங் களவையில் பதிலளித்தார். அதில் அவர், ஏப்ரல் 19, 2012 வரையில் மிக்-21 ரக போர்விமானத்தால் 171 விமானிகளும், 39 பொதுமக்களும் பலியானதாகக் கூறினார். இந்த விபத்துக்களால் மிக்-21 விமானங் கள் எண்ணிக்கை 872 எனப் பாதி யாகக் குறைந்து வீணாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஓய்வுபெற்ற ராணுவ பீரங்கி படையின் பிரிகேடியர் வி.ஏ.எம்.உசைன் கூறும்போது, ‘‘சிறிய நாடுகளின் பயன்பாட்டில் மட்டுமே உள்ள மிக்-21 விமான தயாரிப்பை ரஷ்யா 1985-ல் நிறுத்தி விட்டது. தற்போது பாகிஸ்தானுடன் நிலவும் பிரச்சினைகள் போன்ற சமயங்களில் உணரப்படும் முக்கியத்துவம், மற்ற நேரங்களில் இந்திய ராணுவத்திற்கு கிடைப்ப தில்லை. இதுபோன்ற குறைகளை மத்திய அரசு உடனடியாகத் தீர்ப்பது அவசியம். அப்போதுதான் நம்நாடு உண்மையான பாதுகாப்பு பெறும்’’ எனத் தெரிவித்தார்.
மிக்-21 ரக விமானங்களின் கோளாறுகளை கார்கில் போருக்கு பின் பிரதமர் வாஜ்பாய் தலைமை யிலான மத்திய அரசு கருத்தில் கொண்டது. இதன் பிறகு மிக்-21 விமானத்திற்கு ஈடாக வேறுவகை போர் விமானங்கள் வாங்க எடுக்கப் பட்ட முடிவு 19 ஆண்டுகளாக ஈடேறாமல் உள்ளது. இதில் ஒரு சிறந்த வகை விமானமாகக் கருதப்பட்டதுதான் ஊழல் புகாரில் சிக்கியுள்ள ரஃபேல் போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT