Last Updated : 12 Feb, 2019 08:25 AM

 

Published : 12 Feb 2019 08:25 AM
Last Updated : 12 Feb 2019 08:25 AM

தேர்தல் வெற்றி கேள்விக்குறி, செலவுக்கு அஞ்சி மீண்டும் போட்டியிட விரும்பாத அதிமுக எம்பிக்கள்?

வரும் மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது ஆகும்.

இவரதுமறைவிற்கு பின் அதன் தலைவர்கள் இடையே பல பிளவுகளையும், இணைப்புகளையும் அக்கட்சி சந்தித்தது. இதனால், அதிமுகவினரிடம் முன்பு இருந்த உற்சாகம்சரியத் தொடங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் தாக்கத்தால் அதன் 37 எம்பிக்களில், பெரும்பாலானவர்கள் மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிடவிருப்பம் காட்டவில்லை எனத் தெரிகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’நாளிதழிடம் அதிமுக எம்பிக்கள் வட்டாரம் கூறும்போது, ‘மக்களவை தேர்தலில் பிரச்சார செலவு தொகுதிகளுக்கு ஏற்றபடி பல கோடிகள் ஆவது வழக்கம். இதற்கான பெரும்பங்கு எங்கள் கட்சித் தலைவர் ஜெயலலிதா இருந்த போது கிடைத்தது போல்இனி கிடைக்கும் என்றநம்பிக்கை இல்லை. அவரின்றி கட்சியின் வெற்றியும் கேள்விக்குறியான நிலையில், தமது சொந்தப்பணத்தை செலவு செய்ய பலரும் முன்வராமல் உள்ளனர்’ எனத் தெரிவித்தன.

இதனிடையே, போட்டியிட விருப்பம் இல்லாவிட்டாலும் அனைத்து எம்பிக்களும் விருப்ப மனு அளிக்க வேண்டும் எனஅவர்கள் தலைமை வலியுறுத்தி இருப்பதாகத் தெரிகிறது. இதன்காரணமாக பெரும்பாலானஎம்பிக்கள் விருப்ப மனு அளித்துள்ளனர். மீதியுள்ளவர்களும் பிப்ரவரி 14-க்குள் மனு அளித்துவிட இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இன்றுவரை சுமார் 1,500 பேர்மட்டுமே மனு அளித்துள்ளனர். இந்த மனு எண்ணிக்கை, 2014 மக்களவை தேர்தலின்போது பத்தாயிரத்தை தாண்டி இருந்தது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவினர் அளித்தவிருப்ப மனுக்களின் எண்ணிக்கை 26,174 ஆகும். இதில், கட்சியின்பொதுச்செயலாளராக இருந்துவந்த ஜெயலலிதா பெயரில் கட்சியினர் அளித்த விருப்ப மனுக்களின் எண்ணிக்கை 7,936 என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், இந்தமுறை எவரும்தம் தற்போதைய கட்சித் தலைவர்கள் பெயரில் கட்டணம் செலுத்தி மனு அளித்ததாகத் தெரியவில்லை.

இது குறித்து அதிமுக எம்பிக்கள் வட்டாரம் மேலும் கூறும்போது, ’மனு அளித்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு என்பதும் எங்கள் கட்சியில் உறுதியில்லை. எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை பொறுத்து குறிப்பிட்ட தொகுதிகளில் கடைசி நேரத்தில் மனு அளிக்காதவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளும் உள்ளன. ஒருமுறை சட்டப்பேரவைக்கு போட்டியிட்ட பதர் சயீதிடம்பின்னரே விருப்பமனு கேட்டு பெறப்பட்டது’ எனத் தெரிவித்தன.

மக்களவை தேர்தலில் அதிமுக

இந்தமுறை வலுவானக் கூட்டணிஅமைத்தே போட்டியிட விரும்புகிறது. மேலும் அதிமுகவுடன் மத்தியஆட்சியில் தலைமை ஏற்றிருக்கும்பாஜகவும் கூட்டணி வைக்க வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, கடந்த தேர்தலைபோல் அதிமுக போட்டியிடும் தொகுதி வெகுவாகக் குறையும் வாய்ப்புகள் நிலவுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x