Published : 15 Feb 2019 12:45 PM
Last Updated : 15 Feb 2019 12:45 PM
என் அடுத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன் என கண்ணீருடன் சூளரைத்துள்ளார் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் எய்திய ரதன் தாக்கூரின் தந்தை.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட கோர தாக்குதலில் 45 வீரர்கள் பலியாகினர்.
இந்நிலையில் தாக்குதலில் பலியான ரத்தன் தாக்கூரின் தந்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "புல்வாமா தாக்குதல் நெஞ்சைப் பிளக்கும் செய்தி. ஆனாலும் இந்த தேசத்துக்காக எனது அடுத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்ப தயாராக இருக்கிறேன். பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர். 350 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை காரில் நிரப்பி வந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான்.
தேசத்தையே இந்த செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், மகனை இழந்த தந்தை தனது அடுத்த மகனையும் தேசத்தின் பாதுகாப்புக்காக அனுப்புவதாக சொல்லியிருப்பது அனைவரின் மனங்களையும் நெகிழச் செய்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT