Published : 20 Sep 2014 06:09 PM
Last Updated : 20 Sep 2014 06:09 PM

காஷ்மீர் வெள்ளத்தில் ரு.1000 கோடி மதிப்புள்ள ஆப்பிள் பயிர்கள் நாசம்

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தினால் ரூ.1000 கோடிக்கும் அதிகமான ஆப்பிள் பயிர்கள் கடும் நாசமடைந்ததாக அசோசாம் தெரிவித்துள்ளது.

ஆகவே வரும் பண்டிகைக் காலங்களில் ஆப்பிள்களுக்கு அதிக விலை கொடுக்க மக்கள் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளது அந்த அமைப்பு.

காஷ்மீரிலிருந்து ஆப்பிள்கள் சப்ளை ஏற்கனவே நின்று போன நிலையில் வரும் பண்டிகைக் காலத்தில் ஆப்பிள் விலை 40 முதல் 45% வரை அதிகரிக்கும் என்று அசோசாம் எச்சரித்துள்ளது.

இந்த பேரிழப்பை பிற மாநில ஆப்பிள் உற்பத்திகள் ஒரு போதும் ஈடுகட்டப்போவதில்லை என்பதால் இறக்குமதி ஆப்பிள்களின் ஆதிக்கம் இருக்கும் என்றும் இதன் விலையும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வட இந்தியாவில் குறைந்த விலை ஆப்பிள்கள் பயிர் செய்யப்படுவதால் காஷ்மீர் ஆப்பிள்களுக்கான கிராக்கி நாட்டில் குறைந்து வந்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தின், பாரமுல்லா, குப்வாரா, சோபோர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான ஆப்பிள்கள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த முறை வெள்ளத்தினால் கடும் நாசம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் பொருளாதாரத்தின் இன்றியமையாத அம்சம் ஆப்பிள்தான். ஆண்டுக்கு ரூ.1200 கோடி விற்பனை ஆகிறது, அதாவது 1.6 மில்லியன் டன் ஆப்பிள்கள் விற்பனை செய்யப்படுகிறது.

எனவே தற்போதைய மகாவெள்ளம் ஆப்பிள் பயிர்களை நாசம் செய்திருப்பது காஷ்மீரின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் ஒரு நெருக்கடியாகும் என்று அசோசாம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x