Published : 18 Feb 2019 08:12 AM
Last Updated : 18 Feb 2019 08:12 AM
கடந்த 7-ம் தேதி ‘இந்து தமிழ்’ நாளேட்டில் டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியரின் நான்கு பணியிடங்கள் பல வருடங் களாக நிரப்பப்படாமல் இருப்ப தாக செய்தி வெளியானது. இதன் தாக்கமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக அரசு அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
டெல்லி பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணியாற்றும் தமிழகத்தின் பேராசிரியர்கள், பதிவாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என சுமார் இருபது பேர் இதில் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையரான ஹித்தேஷ்குமார் மக்வானா கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியின் தமிழ்துறை இணைப்பேராசிரியர் எஸ்.சீனிவாசன் டெல்லி கல்லூரிகளில் மூடப்பட்ட தமிழ்துறைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த யோசனைகளை எழுத்து மூலம் ஆணையரிடம் அளித்தார். இதே கல்லூரியின் பொருளாதாரத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர்.நா.காளி தாசம்மாள், தமிழர்களுக்காக கல்லூரி தொடங்க வேண்டியதன் தேவை குறித்த தகவல்களை புள்ளி விவரங்களுடன் ஆணையரிடம் சமர்ப்பித்தார்.
தமிழக அரசின் நிதி உதவி யுடன் டெல்லி தமிழ் கல்வி சங்கம் (டிடிஇஏ) சார்பில் நடைபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாண வர்களுக்கு மேற்படிப்பிற்கான இடம் கிடைப்பதில் உள்ள சிக்கல் களை அதன் மோதிபாக் பள்ளி கிளையின் முதுகலை தமிழாசிரி யரான கே.ராஜேஸ்வரி எடுத்துரைத் தார். இதை சமாளிக்க, டிடிஇஏ விற்கு டெல்லியின் மயூர்விஹாரில் இரண்டு ஏக்கர் நிலம் இருப்பதாக வும், அங்கு தமிழக அரசின் உதவியுடன் கல்லூரி தொடங்கலாம் என அச்சங்கத்தின் செயலாளர் ஆர்.ராஜு தெரிவித்தார். புதிதாக அறக்கட்டளை அமைத்தும் தமிழக அரசு உதவியுடன் துவார காவில் 4 ஏக்கர் நிலம் விலைக்கு வாங்கியும் கல்லூரி தொடங்கலாம் எனவும் ராஜூ யோசனை அளித்தார்.
இதுபோன்ற கல்லூரியை அரசு மற்றும் பொதுமக்களின் நிதியுட னும் தொடங்க அரசு கொள்கை கள் சாதகமாக இருப்பதாக என்சி ஆர்டியின் பொருளாதாரத்துறை இணைப்பேராசிரியர் ஸ்ரீனிவாசன் சுட்டிக் காட்டினார். டெல்லியின் துணைநகரமான குருகிராமில் ஹரி யாணா அரசிடம் மானிய விலையில் நிலம் வாங்கியும் கல்லூரி துவக் கலாம் என குருகிராம் தமிழ்சங்கத் தின் தலைவர் சக்தி யூ.பெருமாள் குறிப்பிட்டார்.
உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல் கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை இணைப்பேராசிரியரான எஸ்.சாந்தினிபீ, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் சார்புக் கல் லூரியை டெல்லியில் அமைப்பது உடனடி தீர்வாக இருக்கும் என்றார். இதற்கு, தான் பணியாற்றும் பல்கலை.யின் உறுப்புகிளைகள் கேரளா, பிஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் செயல்படு வதை உதாரணம் காட்டினார். இதன் அடிப்படையில் ஆணையர் மக்வானா, திருவாரூர் மத்திய பல் கலைகழகம் சார்பிலும் டெல்லியில் கிளை அமைக்க முடியுமா என்பதன் மீதும் கருத்துகளை கேட்டறிந்தார். இதுபோல், அமையும் கல்லூரிக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார் பிலும் மாணவர்களுக்கு உதவித் தொகை பெறும் யோசனை யும் அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT