Published : 20 Feb 2019 08:02 AM
Last Updated : 20 Feb 2019 08:02 AM
பாமகவை கூட்டணியில் சேர்க்கும் வாய்ப்பை திமுக நழுவ விட்டி ருப்பதாகக் காங்கிரஸ் தலைமை ஆதங்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற கட்சிகளையும் கூட்டணியில் இருந்து நழுவவிடாமல் இருக்க அதன் தலைவர் மு.க.ஸ்டாலினி டம் காங்கிரஸ் வலியுறுத்த இருப்ப தாகவும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர் தலில் போட்டியிட அதிமுகவுடன் பாமக இணைந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் மற்ற கட்சிகளை சேர்க்கும் பொறுப்பு ஸ்டாலினிடம் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையின் செயல்பாடு கள் குறித்துகூட காங்கிரஸ் அறிய விரும்பவில்லை. அதேபோல், திமுகவும் அதை வெளிப்படையாக எவரிடமும் சொல்லாமல் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் ரகசியமாக பேசியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்று வெளி யான அதிமுக-பாமக கூட்டணி அறிவிப்பு, காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக் கிறது. பாமகவுடன் சமயோசித மாகப் பேசி திமுக கூட்டணிக்கு இழுக்கும் வாய்ப்பை ஸ்டாலின் இழந்ததாகவும், இதனால் காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத் தமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீதம் உள்ள தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளிடமாவது சமயோசிதமாகப் பேசி திமுக கூட்டணியில் ஸ்டாலின் சேர்க்க வேண்டும் என ராகுல் விரும்புகிறார்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பின் தாங்கள் அதிக வலுப்பெற்று விட்ட தாக திமுக தவறாகக் கருதுகிறது. இதேபோன்ற தவறான கருத்தால் தான் பாமகவை கடந்த தேர்தலிலும் திமுக சேர்க்கத் தவறியது. இனி மற்ற கட்சிகளையாவது கூட்டணியில் திமுக இழுக்கவில்லை எனில் எங்கள் வெற்றி வாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும். பாமகவை எங்கள் கூட்டணியில் இடம்பெறச் செய்யும் வாய்ப்பை இழந்துவிட்டோம். மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான முழுப்பொறுப்பையும் ஸ்டாலினிடம் எங்கள் தலைமை விட்டதால் ஏற்பட்ட இழப்பு இது’’ எனத் தெரிவித்தனர்.
கடந்த 2014 மக்களவை தேர் தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸுக்கு கன்னியாகுமரியில் மட்டுமே இரண்டாது இடம் கிடைத்தது. மற்ற தொகுதிகளில் நான்கு, ஐந்தாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டிருந்தது. இதனால், இந்தத் தேர்தலில் திமுக அளிக்கும் தொகுதிகளைப் பெற்று கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இந்த காரணத்தினால்தான் காங்கிரஸ் தலைவர்களான குலாம்நபி ஆசாத்தும், அகமது பட்டேலும் தமிழகத்தின் புதிய தலைவரான கே.எஸ்.அழகிரியிடமும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தலையிட வேண்டாம் எனக் கோரியதாகக் கூறப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய பாமக கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. எனினும், 12 தொகுதிகளில் குறைந்தபட்சமாக சுமார் 78,000, அதிகபட்சமாக தர்மபுரியில் 2,85,000 வாக்குகளும் பெற்றது. இனி அந்த வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பலன் தரும் எனக் காங்கிரஸ் நம்பு கிறது. இவர்களுடன் தேமுதிகவும் இணைந்துவிட்டால் வடமாவட்டங் களில் அதிமுக கூட்டணி வலு வாகும் எனவும் காங்கிரஸ் அஞ்சு கிறது.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் பாஜக சேர்ந்திருப்ப தால் சிறுபான்மையினர் வாக்கு களால் தங்கள் கூட்டணிக்கு லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் காங்கிரஸிடம் உள்ளது. இதற்கு தடையாக ஏதாவது ஒரு முஸ்லிம் கட்சி, அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டால் சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும் என்ற அச்சமும் காங்கிர ஸிடம் நிலவுகிறது. இருப்பினும், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் தங்கள் கூட்டணிக்கு கிடைக்கும் என்பதும் காங்கிரஸ் போடும் உறுதியான கணக்கு.
தேவேந்திரகுல வேளாளர் சமு தாய வாக்குகள் பிரிந்தால்தான் திமுக கூட்டணிக்கு லாபம் என வும் காங்கிரஸ் கணக்கிடுகிறது. அச்சமுதாய கட்சிகளின் தலைவர் களான ஜான் பாண்டியனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் கூட அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டால் அவர்கள் சமுதாய வாக்குகள் தமக்கு இழப்பாகி விடும் என்ற கருத்தும் காங்கிரஸிடம் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் தலைமையிடம் ஆலோசிக்க அழகிரி தலைமையில் தமிழகத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT