Published : 15 Feb 2019 04:35 PM
Last Updated : 15 Feb 2019 04:35 PM
உ.பி.யில் அளவீட்டுக்கருவி(மீட்டர்) அடிப்படையில் மின்சாரக்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 39 சதவிகிதம் மட்டுமே. இந்த தகவல், உபியின் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் மின்சாரம் கவுன்சில்(சிஈ..ஈ.டபிள்யூ) நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
சவுபாக்கிய திட்டத்தின் கீழ் உபியில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைத்துள்ளது. இதில், புதிதாக மின்சார வசதி அளிக்கப்பட்ட வீடுகளுக்கான கட்டண செலவால் மாநில அரசிற்கு நிதிச்சுமை ஏற்பட உள்ளது.
சிஈ.ஈ.டபிள்யூ சார்பில் 90 கிராமங்களின் 1800 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதுவன்றி, பத்து மாவட்டங்களின் 90 வார்டுகளிலும் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதற்கு உதவியாக சக்தி நீட்டிப்பு திறன் ஆற்றல் பவுண்டேஷன் என்ற நிறுவனமும் உதவியாக இருந்துள்ளது. இதில், புதிய இணைப்பு பெற்றவர்களில் பலருக்கு இன்னும் பொருத்தப்படாத அளவீட்டுக் கருவிகளும், முறையாக வசூலிக்கப்படாமல் உள்ள கட்டணமும் காரணம் எனக் கணக்கெடுப்பில் வெளியாகி உள்ளது.
இதை லக்னோவில் நேற்று வெளியிட்ட உபி மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குநர் பிரம்ம பால் கூறும்போது, ‘நுகர்வேரின் நடவடிக்கைகளை அறிய இதுபோன்ற கணக்கெடுப்புகள் அவசியம். இதில் வெளியாகும் தவறுகளை அரசு அமைப்புகள் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பது அவசியம்.’ எனத் தெரிவித்தார்.
4 மணி நேர மின்சாரம்
உபியில் ஒருசில வருடங்களுக்கு முன்பு வரை தற்போது கிடைக்கும் 20 மணி நேரம் மின்சார விநியோகம் என்பது சாத்தியமில்லாமல் இருந்தது. அதிகபட்சமாக 12 முதல் வெறும்
நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.
டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்திருட்டு
இந்த நிலையிலும் சாலைஓர மின்கம்பங்களிலும் வயர்களை கொக்கிகளாக மாட்டி மின்சாரம் திருடப்பட்டு வந்தது. சமாஜ்வாதி ஆட்சியில் அக்கட்சியின் நிறுவனரான முலாயம்சிங் யாதவ் தொகுதியான எட்டாவாவின் கிராமத்தில் அரசிற்கு தெரியாமல் ஒரு டிரான்ஸ்பார்மைரையே அமைத்து மிந்திருட்டு நிகழ்ந்தது.
நிதிச்சுமை ஏற்படும்
தற்போது மின்சார விநியோகம் சரியான பிறகு இந்த மின்திருட்டுகள் சில இடங்களில் தொடர்கிறது. இதனால், உபி அரசிற்கு பெரிய அளவிலான நிதிச்சுமை ஏற்படும் நிலை உள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT