Last Updated : 07 Feb, 2019 08:07 PM

 

Published : 07 Feb 2019 08:07 PM
Last Updated : 07 Feb 2019 08:07 PM

உ.பி.: ப்ளஸ்டூ, பத்தாம் வகுப்பு தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க சிசிடிவி கேமிராக்கள்: மாபியாக்களுக்கு யோகி ஆதித்யநாத் சவால்

உபியின் சிறப்பு படை பாதுகாப்பில் ப்ளஸ்டூ, பத்தாம் வகுப்பு தேர்வு இன்று துவங்கியது. சுமார் 58 லட்சம் மாணவர்கள் எழுதுவதில் காப்பி அடிப்பதை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

இது குறித்து உபி மாநில தலைமை செயலாளர் நீனா ஸ்ரீவாத்ஸவா கூறும்போது, ‘காப்பி அடிக்கப்படுவதை தடுக்க, கம்ப்யூட்டர் குறியீடுகளுடன் சுமார் 4.37 விடைத்தாள்கள் விநியோகிப்பட்டுள்ளன. குரல் பதிவு மற்றும் சிசிடிவி கேமிராக்களை தொடர்ந்து கண்காணிக்க தனிப்பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தார்.

 

இதுபோன்ற பள்ளி இறுதி அரசு தேர்வுகளில் உபி, பிஹார் மாநிலங்களின் மாணவர்கள் பெருமளவில் காப்பி அடித்து தேர்ச்சி பெறுவது வழக்கமாக உள்ளது. பிஹாரில் ஆபத்தான முறையில் கட்டிடச்சுவர்களில் தொங்கியபடி, ஜன்னல்களில் நின்றபடி காப்பியடிக்க உதவும் படம் கடந்த 2015-ல் வெளியாகி நாட்டையே உலுக்கியது.

 

அதையும் மிஞ்சும் வகையில் உபியின் பெரோஸாபாத்தில் தேர்வில் மாணவர்களை சோதனை செய்ய வந்தவர்கள் மீது இருபது நாய்கள் ஏவி விடப்பட்டு பறக்கும் படையினர் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த நிலையை மாற்ற கடந்த 2017-ல் தம் ஆட்சி அமைந்த பின் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத், உபியில் மாற்ற முயல்கிறார்.

 

இதற்காக முதல்வர் யோகியே நேரடியாக தலையிட்டு இந்த தேர்விற்கானப் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்து வருகிறார். உபியில் மொத்தம் உள்ள 8,354 தேர்வு மையங்களில், 1,314 மிகவும் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

 

இதிலும் 448 தேர்வு மையங்கள் மிகவும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை, கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வின் சம்பவங்கள் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

காப்பி அடிக்க பெயர்போன உபியின் மேற்கு பகுதி

 

பத்தாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் காப்பி அடித்தலுக்கு உபியின் மேற்குப்பகுதி பெயர் பெற்றது. இங்குள்ள அலிகரின் மாபியாக்கள் வருடத்தில் ஒருமுறை தன் அனைத்து கிரிமினல் வேலைகளை விடுத்து இந்தப் பணிகளில் ஈடுபடும்.

 

காப்பி அடிக்க ரூ.50 கோடி

 

இவர்கள் மாணவர்கள் தேர்வுக்காக விண்ணப்பிக்கும் நாள் முதல் தேர்ச்சி பெறச் செய்வது வரை என தனியாக ஒரு தொகை பெறுகின்றனர். இதில், அலிகரின் தாலுக்காவான அத்ரோலியில் மட்டும் காப்பி அடிப்பதில் உதவ ரூ.50 கோடி கைமாறி இருந்தது.

 

மாபியாக்களுக்கு சவால் விடும் யோகி

 

இந்த தொகை, தேர்வு மையங்களின் அடிமட்ட ஊழியர் முதல் உபியின் ஆளும்கட்சி அரசியல்வாதிகள் வரை பகிர்ந்தளிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. முதல்வரின் யோகியின் தீவிர நடவடிக்கைகளால் இந்த வருடம் காப்பி மாபியாக்களுக்கு சவாலாகி விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x