Published : 13 Feb 2019 12:35 PM
Last Updated : 13 Feb 2019 12:35 PM
காஷ்மீரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அடையாளம் மற்றும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
சண்டை நடைபெற்ற இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட தீவிரவாதிகள் பயன்படுத்திய பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
புத்காம் மாவட்டத்தில், தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சதுரா நகரத்தின் அருகே உள்ள கோபாலபூரா பகுதியில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினரும் போலீஸாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டையின்போது, தீவிரவாதிகள் மறைந்திருந்து தேடும் பிரிவினர்மீது துப்பாக்கியால் சுட்டதை அடுத்து அங்கு துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அப்போது இரு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் அபாயகரமான வெடிபொருட்கள் கிடப்பதாகவும் அங்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமெனவும் போலீஸார் அறிவுறுத்தினர். மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் வெடிபொருட்களை போலீஸார் முழுமையாக அகற்றும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT