Published : 14 Feb 2019 08:45 PM
Last Updated : 14 Feb 2019 08:45 PM
இந்தி பேசும் உ.பி.யில் அம்மொழிக்கானப் பாடத்தேர்வை நேற்று 2.6 லட்சம் மாணவர்கள் தவிர்த்துள்ளனர். இதற்கு இத்தேர்விற்காக சரியாகப் படிக்கவில்லை என அவர்கள் காரணம் கூறி உள்ளனர்.
உ.பி.யில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ்டூவிற்கான அரசு தேர்வு கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதை இந்த வருடம் சுமார் 58 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
இதில், ஒவ்வொரு வருடமும் காப்பி அடித்து தேர்வு எழுதிம் வழக்கம் இருந்தது. இதை தடுத்து நேர்மையாக நடத்த வேண்டி உபி முதல்வர் யோகியே நேரடியாக தலையிட்டு இந்த முறை தேர்விற்கானப் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற இந்தி தேர்வில் 2.6 லட்சம் மாணவர்கள் அதை எழுதாமல் தவிர்த்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தி பாடத்தேர்வை காப்பி அடித்து எழுதத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் பெரிய மாநிலமான உபி, இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலம் ஆகும். இதில் இந்தி மொழி தேர்வை 206 லட்சம் மாணவர்கள் எழுதாமல் தவிர்த்தது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தம் தாய்மொழியான இந்தியின் தேர்வை தவிர்த்த மாணவர்கள் பட்டியலில் உபியின் ஹர்தோய் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்து ஆசம்கர், பிரயாக்ராஜ், ஜோன்பூர் எனத் தொடர்கிறது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT