Published : 20 Feb 2019 02:54 PM
Last Updated : 20 Feb 2019 02:54 PM
தன் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மத்திய அரசு மீது திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புகார் கூறியுள்ளார். தனது மாநிலத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட பாஜக முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அரசு தன் பல்வேறு மத்திய நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவதாகவும் மம்தா குற்றம் சாட்டியுள்ளார். இதில் ஒன்றாக தனது தொலைபேசி உரையாடல் சட்டவிரோதமான முறையில் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் மத்திய அரசு மீது புகார் கூறி உள்ளார்.
இது குறித்து மம்தா கூறும்போது, ''இதுபோல், ஒட்டுக்கேட்பது ஜனநாயக நாட்டிற்கு விரோதமானது. இதன் மீதான முழு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பாஜகவிற்கு ஆதரவாக மதக்கலவரம் தூண்ட முயலும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கிற்கு வெற்றி கிடைக்காது'' எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு இடையே பல்வேறு பிரச்சினைகளில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி மம்தா மீது குற்றம் சுமத்தி இருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் மம்தா, பல முக்கிய விஷயங்களில் பிரதமர் மோடி அரசியல் செய்வதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT