Published : 25 Jan 2019 10:16 AM
Last Updated : 25 Jan 2019 10:16 AM
காங்கிரஸ் தேசிய பொதுச் செய லாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரி யங்கா வத்ராவின் அரசியல் வர வால் உ.பி.யில் பாஜக பலனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உ.பி.யில் 80 மக்களவை தொகுதி களில் 2 மட்டுமே காங்கிரஸ் வசம் உள்ளன. இதுபோல் 403 உறுப்பினர் களை கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 7 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் காங் கிரஸை ஒதுக்கிவிட்டு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கடந்த 12-ம் தேதி கூட்டணி அமைத் தன. பாஜகவுக்கு எதிரான உயர் சமூகத்தினர் மற்றும் முஸ்லிம் வாக்குகளை இவர்கள் நம்பியுள் ளனர். இந்நிலையில் பிரியங்காவின் வரவால் இவர்களுக்கான வாக்குகள் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உ.பி.யில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் (சுமார் 19 சத வீதம்) உள்ளனர். இவர்களை குறி வைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டால் வாக்குகள் பிரிந்து, பாஜக பலனடையும் வாய்ப்புகளும் உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சமாஜ்வாதி கட்சி எம்.பி. பின்னி பிரசாத் வர்மா கூறும்போது, ‘பிரியங்கா வரவால் எங்கள் கூட்டணியின் வாக்குகள் கணிப்பில் மாற்றம் ஏற்படும். பாஜகவுடன் இருந்த நேரடிப்போட்டி மாறி, மும்முனைப்போட்டி உருவாகும். இது பாஜகவுக்கு சாதகமாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார்.
இதனால் பகுஜன் சமாஜ் சமாஜ் வாதி கூட்டணியில் காங்கிரஸுக்கு நியாயமான இடங்களை ஒதுக்கி, அக்கட்சியை கூட்டணியில் சேர்த் தால் மட்டுமே பாஜகவை எதிர்க்க முடியும் என்ற கருத்து எழுந்துள்ளது. இதற்காக, மாயாவதியும், அகிலேஷும் பேச முன்வந்தால் தாம் ஒத்துழைப்பு அளிப்பதாக ராகுல் காந்தி அமேதியில் நேற்று முன் தினம் கூறியிருந்தார். எனவே நட்புரீதியான போட்டி உட்பட ஏதேனும் ஒருவகையில் இந்த மூன்று கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி. மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த குலாம் நபி ஆசாத் ஹரியாணாவுக்கு மாற்றப்பட்டு, பிரியங்காவுக்கு கிழக்கு உ.பி.க்கான பொறுப்பும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு மேற்கு உ.பி.க்கான பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் உ.பி. காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT