Published : 26 Sep 2014 04:15 PM
Last Updated : 26 Sep 2014 04:15 PM
உத்தரப் பிரதேசத்தின் அரசு பள்ளியில் தண்ணீர் குடித்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் கல்சின்னா என்ற இடத்தில் இயங்கும் அரசு பள்ளியில் உள்ள குழாயில் தண்ணீர் குடித்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தண்ணீர் குழாய் திறந்த வெளியில் இருப்பதால், அதில் ஏதேனும் தொற்று அல்லது பாதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து விசாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT