Last Updated : 17 Jan, 2019 11:58 AM

 

Published : 17 Jan 2019 11:58 AM
Last Updated : 17 Jan 2019 11:58 AM

நோயாளிகளுக்கு படுக்கை மறுப்பு; தெருநாய்களுக்கு போர்வை: பிஹார் அவலம்

பிஹார் மாநிலம் நவாடா மாவட்ட அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் கட்டில்களில் உறங்க நோயாளிகளுக்கு படுக்கை வசதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அங்குள்ள வார்டுகளில் உள்ள கட்டில்களை நாய்கள் ஆக்கிரமித்து உறங்குகின்றன. இது குறித்து மருத்துவமனையில் இருந்த நோயாளி ஒருவர், "இங்குள்ள கட்டில்களை பெரும்பாலும் தெருநாய்களே ஆக்கிரமித்துள்ளன. இதனால் எங்களுக்குப் படுக்கைகள் வழங்கப்படவில்லை. நாங்கள் குளிருக்குப் போர்வை கேட்டால் மருத்துவமனை நிர்வாகம் தருவதில்லை. ஆனால், இந்த நாய்களுக்குப் போர்வை இருக்கிறது" என்றார்.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அணுகியபோது, "இது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இது எப்படி நடந்தது இதற்கு யார் காரணம் என்பதை அறிவோம். இதற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மருத்துவமனையின் பொறுப்பாளர் டாக்டர் உமேஷ் சந்திரா கூறினார்.

பிஹார் மாநிலத்தின் மருத்துவ சேவை இத்தகைய விமர்சனத்துக்கு உள்ளாவது இது முதன்முறையல்ல. கடந்த ஜூலை மாதம் மாநிலத்தில் 2-வது பெரிய அரசு மருத்துவமனையான நாலந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை வெள்ளம் புகுந்தது.

அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்ளும் தண்ணீர் சூழ்ந்தது. அந்தத் தண்ணீரில் மீன்கள் நீந்தித் திரிவது செய்தியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x