Last Updated : 10 Jan, 2019 05:56 PM

 

Published : 10 Jan 2019 05:56 PM
Last Updated : 10 Jan 2019 05:56 PM

பொதுப்பிரிவு ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: மோடிக்கு தேசிய சிறுபான்மை ஆணையம் பாராட்டு

பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழைமக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், 124வது சட்டத் திருத்த மசோதா, 2019ஐ நிறைவேற்றியது வரலாறு சிறப்புமிக்கது என்று தேசிய சிறுபான்மை ஆணையம் பாராட்டியுள்ளது.

இதுகுறித்து தேசிய சிறுபான்மை ஆணைய தலைவர் சையத் காயோரல் ஹசன் ரிஸ்வி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அரசு வேலைகள் மற்றும் அரசு கல்வி நிலையங்களில் அனுமதி போன்றவற்றில் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் 124வது சட்டத் திருத்த மசோதா, 2019ஐ நிறைவேற்றிய மோடிக்கு நன்றிகள்.

இது வரலாற்றுரீதியான ஒரு மசோதாவாகும். இச்சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் முதன்முறையாக சிறுபான்மை மக்களும் இடஒதுக்கீடு பயன்களைப் பெறும் தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.

இதற்காக நாடாளுமன்றத்தில் மூலம் சட்டம் கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியலமைப்பின் 124 வது திருத்த மசோதாவை 2019 ஆம் ஆண்டிற்கான வரலாற்று ரீதியான அங்கீகாரமாகக் கொண்ட தேசிய ஆணையம் பாராட்டியுள்ளது.

அரசு கல்வி நிறுவனங்களில் பொது வேலைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கிறது.

இவ்வாறு சையத் காயோரல் ஹசன் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x