Last Updated : 12 Jan, 2019 08:28 AM

 

Published : 12 Jan 2019 08:28 AM
Last Updated : 12 Jan 2019 08:28 AM

உ.பி.யில் 80 தொகுதியை பிடிக்க பாஜக திட்டம்: செயல்படாத எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை

உத்தரபிரதேசத்திலுள்ள 80 மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார். இதில் செயல்படாத சுமார் 55 எம்பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது எனத் தெரியவந்துள்ளது.

உ.பி.யில் பாஜகவிற்கு 71 எம்பிக்கள் உள்ளனர். இவர்களது செயல்பாடுகள் மற்றும் வரும் மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்தும் உ.பி. பஞ்சாயத்து அளவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் அமெரிக்காவின் தனியார் நிறுவனம் அமர்த்தப்பட்டிருந்தது. இதன் அறிக்கையின் பேரில் தனது பெரும்பாலான எம்பிக்களுக்கு பாஜக மீண்டும் தேர்தலில் வாய்ப்பளிக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதன் மீது ஆலோசனை செய்ய உ.பி. மாநில நிர்வாகிகளின் கூட்டம் டெல்லியின் பாஜக தலைமையகத்தில் சிலதினங்களுக்கு முன் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உ.பி. மாநிலத்தின் எம்பிக்களும் கலந்து கொண்டனர். அவர்களில் சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு தேசிய தலைவர் அமித் ஷா, செயல்படாதவர்கள் பெயர்களை குறிப்பிட்டு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாது எனத் தெரிவித்திருந்ததாகக் கருதப்படுகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் உபி வட்டாரங்கள் கூறும்போது, ‘பாஜகவின் 57 எம்.பி.க்கள் மத்திய அரசின் நலத்திட்டங்களில் பலன்பெற பொதுமக்களை அணுகவில்லை. இதன் மீது விழிப்புணர்வு நடத்தவும் முயற்சிக்கவில்லை. இது அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு மூலம் தெரிய வந்திருப்பதால் அவர்கள் தொகுதிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது’ எனத் தெரிவித்தன.

தமது தொதிகளில் உள்ள உ.பி. விவசாயிகளின் குறைகளையும் தீர்க்க பாஜக எம்பிக்கள் முன்வரவில்லை என அந்த ஆய்வு முடிவில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் தங்களுக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது என்பதை சில பாஜக எம்.பி.க்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டனர். இதனால், அவர்கள் சமாஜ்வாதி உள்ளிட்ட வேறு சில கட்சிகளில் தாவும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உ.பி.யின் பெரும்பாலான தொகுதிகளின் வெற்றி பாஜகவிற்கு அவசியம் ஆகும். எனவே, இதை மீண்டும் பெறுவதில் அமித் ஷா அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x