Published : 09 Jan 2019 04:59 PM
Last Updated : 09 Jan 2019 04:59 PM
இப்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் முதல்வர் காலக்கட்டத்தில் நடந்த 21 போலீஸ் என்கவுன்ட்டர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற நியமன ஓய்வு பெற்ற நீதிபதி எச்.எஸ்.பேடி கண்காணிப்பு கமிட்டியின் இறுதி அறிக்கையை வெளிப்படுத்த வேண்டாம் என்ற குஜராத் அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, பொதுநல மனுதாரர்களுடன் ரகசிய பேடி கமிட்டி அறிக்கையை பகிர வேண்டும் என்று உத்தரவிட்டது. பொது நல மனுவைச் செய்தவர்கள் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், மற்றும் மறைந்த பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸை பிரதிநிதித்துவம் செய்யும் வழக்கறிஞர்கள் ஆகியோராவார்கள்.
மேலும் இந்த மனுதாரர்கள் ஊடகத்திடம் பேடி கண்காணிப்பு அறிக்கையை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற குஜராத் அரசின் மன்றாடலுக்கும் உச்ச நீதிமன்றம் செவிசாய்க்கவில்லை.
ஓய்வு பெற்ற நீதிபதி பேடி கண்காணிப்பு கமிட்டியின் இறுதியும் 11-வதுமான அறிக்கை கடந்த ஆண்டு ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது ரகசிய அறிக்கை என்று இதுவரை பாதுகாக்கப்பட்டது.
“இது குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவர் ஆகியோர் தரப்பில் முன் அனுமானங்களை ஏற்படுத்தும்” என்று குஜராத் அரசு வழக்கறிஞர் ரஜத் நாயர் தெரிவித்தார். இவர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்குப் பதிலாக ஆஜரானார், இவர் முன்னதாக துஷார் மேத்தா வேறு ஒரு வழக்கில் இருப்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரினார், கோர்ட் இதனை ஏற்கவில்லை.
நாயர் கேள்விக்கு எதிர்வினையாற்றிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், பதிவு செய்ய வேண்டி “நீங்கள் யார்?” என்றார். அவர் அதற்கு “குஜராத் மாநிலஅரசு” என்று பதிலளித்தார். இதற்கு தலைமை நீதிபதி, “பிறகு உங்கள் நலன்களைப் பாருங்கள்” என்றார்.
பிறகு கூறிய தலைமை நீதிபதி, “நாங்கள் பேடி கமிட்டியின் அறிக்கையை ஏற்கவில்லை, ஆனால் அறிக்கை பகிரப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறோம்” என்றார்.
அதாவது, “இது 225 பக்க அறிக்கையாகும்.. அறிக்கையில் என்ன உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது.. அறிக்கையை ஏற்பது பற்றிய முடிவு பிற்பாடு எடுக்கப்படும். எங்கள் உத்தரவுக்கிணங்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த அறிக்கையை பரிசீலிக்கும் போது நீங்கள் என்ன கூற வேண்டுமோ கூறுங்கள்” என்று வாய்மொழியாக தலைமை நீதிபதி கோகய் தெரிவித்தார்.
பிறகு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்வேதி, கூறும்போது, மனுதாரர்களுக்கு இந்த வழக்கில் எந்த வித நிலைப்பாடும் இருக்க முடியாது. இதனை வெளியிட்டால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக முன் அனுமானங்கள் எழும். விசாரணை நீதிமன்றமே பேடி அறிக்கையை அறிய முடியும் என்றார்.
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், இப்போதே விசாரணை நீதிமன்றத்துக்கு பேடி அறிக்கையை அனுப்ப வேண்டுமா என்றார்.
முந்தைய விசாரணையில் பேடி அறிக்கையையே குஜராத் அரசு எதிர்த்தது. அதாவது நீதிபதி பேடி மற்ற உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் அறிக்கை தயாரித்ததாக குற்றம் சாட்டியது.
இந்நிலையில் இன்று ரஞ்சன் கோகய் கூறும்போது, “2012-ல் உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையிலேயே விசாரித்து அறிக்கை தயாரித்துள்ளது. “நாங்கள் நம்பிக்கை வைத்த ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி எங்கள் உத்தரவுக்கேற்ப செயல்பட்டுள்ளார்., இப்போது அவரது அறிக்கையை நாங்கள் ஏற்கக் கூடாது என்று எப்படி கூற முடியும்?” என்றார்.
என்கவுன்ட்டர்கள் மீது சந்தேகங்கள்:
மறைந்த பத்திரிகையாளர் வர்கீஸ் தனது மனுவில், 2003-2006 இடையே நடந்த என்கவுன்ட்டர்கள் குறித்து சந்தேகம் எழுப்புகிறார். குஜராத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட என்கவுன்ட்டர் பட்டியலைத்தான் வர்கீஸும் கோர்ட்டில் தாக்கல் செய்து அதாவது என்கவுன்ட்டர்கள் ஒரே வகைமாதிரியாக உள்ளது சந்தேகத்தை வரவழிக்கிறது என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளி முதல் சந்தேக பயங்கரவாதிகள் வரை என்கவுன்ட்டர்கள் ஒரே வகைமாதிரியில் இருப்பது சந்தேகத்தை வரவழைக்கிறது, என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களின் வயது 22 முதல் 37 வயதானவர்களாகவே இருக்கிறது. சாதாரணக் குடிமகன்களை ஆயுதம் ஏந்தியவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றல்லவா இருக்கிறது என்று அவர் சந்தேகம் எழுப்பினார்.
ஜாவேத் அக்தரும், கொல்லப்பட்ட அனைவரும் ஜே.இ.எம். பயங்கரவாதிகள் என்றும் இவர்கள் மோடியைக் கொலை செய்ய சதி செய்தனர் என்றும் கூறுகின்றனர். இது எப்படி என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் பேடி கமிட்டி அறிக்கையை மனுதாரர்களிடம் பகிர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குஜராத் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT