Published : 29 Jan 2019 06:07 PM
Last Updated : 29 Jan 2019 06:07 PM
ராமஜென்ம பூமி பாபர் மசூதிக்கு அருகே கையகப்படுத்திய மிகுதி நிலங்களை அதற்குரிய உரிமையாளர்களிடம் சேர்ப்பிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்துள்ளது.
அதாவது 67.703 ஏக்கர் நிலம் பெரும்பாலும் இந்துக்களுக்குச் சொந்தமான நிலங்கள், மத்திய அரசின் கைவசம் உள்ளது.
இந்த நிலங்கள் கையகப்படுத்தியதை எதிர்த்து மொகமது அஸ்லம் என்கிற புரே இந்த கையகப்படுத்துதலின் சில அம்சங்கள் மீது கேள்வி எழுப்பி வழக்கு தொடர்ந்திருந்தார். இதன் மீது மார்ச் 2003 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது, அந்த உத்தரவை மாற்றியமைக்குமாறு செவ்வாயன்று மத்திய அரசு மனு செய்துள்ளது.
இதே பூரே வழக்கில்தான் மார்ச் 14, 2002-ல் உச்ச நீதிமன்றம் தன் இடைக்கால உத்தரவில் இந்த 67.7 ஏக்கர்கள் நிலங்களில் பூமிபூஜை, விக்கிரக ஆராதனை உள்ளிட்ட மதரீதியான எந்த வித சடங்கு சம்பிரதாயங்களும் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த இடைக்கால உத்தரவைத்தான் 2003-ல் நீதிபதி ராஜேந்திர பாபு தலைமையிலான அமர்வு உறுதி செய்தது. அதாவது பாபர் மசூதி இடமும் இந்த 67.7 ஏக்கர் நிலப்பரப்பும் ஒன்றில் ஒன்று அடங்கிய பகுதியாகும் ஆகவே இடைக்கால உத்தரவு அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு முடியும் வரை செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டிருந்தது.
2010ல் அலஹாபாத் நீதிமன்றம் தகராறுக்குட்பட்ட பகுதிகளை 3 விதமாகப் பிரித்தது. இந்தப் பிரிவை எதிர்த்து இந்துக்கள், முஸ்லிம்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. பிறகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றினார்.
தற்போது மாற்றம் கோரும் மத்திய அரசின் மனுவில், ராமஜென்மபூமி நியாஸ் என்ற அமைப்பு, கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிமையாளர்கள் என்று நிலங்களைத் திருப்பி கேட்பதை சுட்டிக்காட்டியுள்ளது. ராமஜென்மபூமி நியாஸ் அமைப்பு 67,703 ஏக்கர் கையகப்படுத்திய நிலங்களில் 42 ஏக்கர்கள் மிகுதி நிலங்கள் என்றும் அது தங்களுக்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியதை மத்திய அரசு தன் மனுவில் சுட்டிக்காட்டியதோடு, இதனை செய்து முடிக்க வசதியாக மார்ச் 2003 உத்தரவை மாற்றியமைக்குமாறு மத்திய அரசு தன் மனுவில் கோரியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT