Last Updated : 29 Jan, 2019 09:49 AM

 

Published : 29 Jan 2019 09:49 AM
Last Updated : 29 Jan 2019 09:49 AM

தொகுதிகளை அடையாளம் காண்பதில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் தீவிரம்

மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இவற்றில் உள்ள 17 தனித்தொகுதிகளில் பெரும்பாலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிட அதன் தலைவர் மாயாவதி விரும்புகிறார்.

இவர் உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள தொகுதிகளான அலிகர், மீரட், ஆக்ரா, பிஜ்னோர், சஹரான் பூர், நாகினா ஆகியவற்றிலும் தமது கட்சியினரை நிறுத்த விரும்புகிறார். இதேபகுதியின் பாக்பத் மற்றும் மதுரா தொகுதிகள் அஜீத்சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோல், முஸ்லிம்கள் அதிகமுள்ள கிழக்குப்பகுதியில் உள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. உ.பி.யின் முக்கிய தொகுதிகளான லக்னோ, எட்டாவா, முராதாபாத், கோரக்பூர், அலகாபாத், கான்பூர், ஆசம்கர் ஆகியவற்றிலும் சமாஜ்வாதி போட்டியிட விரும்பு கிறது. கிழக்குப்பகுதியின் அக்பர் பூரில் இருமுறை எம்பி.யாக இருந்த மாயாவதி 15 வருடங்களுக்கு பின் மீண்டும் போட்டியிடுகிறார். அக்பர்பூரை விட பொருத்தமான தொகுதியையும் அவர் தேடிக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2014 மக்களவைத் தேர் தலின்போது உ.பி.யில் அகிலேஷ் முதல்வராக இருந்தார். வரும் தேர்தலில் 2009-ல் மக்களவை தேர்தலில் வென்ற கன்னோஜ் தொகுதியில் மீண்டும் அவர் போட்டி யிடுகிறார். இத்தொகுதியின் தற் போதைய எம்பியான தனது மனைவி டிம்பிள் யாதவ் இந்த முறை போட்டியிட மாட்டார் என அகிலேஷ் ஏற்கெனவே அறிவித் திருந்தார். அகிலேஷின் தந்தையும் கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மெயின்புரி தொகுதி யில் போட்டியிடுகிறார். இவரது சகோதரரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராம் கோபால் யாதவின் மகன் அக்ஷய் யாதவ் பெரோஸாபாத்தில் மீண்டும் போட்டியிருகிறார். இவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக சமாஜ் வாதியில் இருந்து வெளியேறி புதிய கட்சி துவக்கியுள்ள ஷிவ்பால்சிங் யாதவ் அறிவித்துள்ளார்.

கடந்த 2009 மற்றும் 2014 மக்க ளவை தேர்தலில் பகுஜன்சமாஜ் கட்சியை விட சமாஜ்வாதி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 2014- ல் பகுஜன் சமாஜ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. எனி னும், மாயாவதியுடன் கூட்டணி பேசிய அகிலேஷ் இருகட்சிகளுக் கும் சமமான எண்ணிக்கையில் தொகுதிப் பங்கீடு கோரி இருந்தார். இதன்மூலம், இருகட்சிகளின் தொண்டர்களும் பாரபட்சம் இன்றி பரஸ்பரம் இணைந்து பணியாற்று வார்கள் என்பது காரணமாக இருந்தது. இந்த கூட்டணி உ.பி.யின் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மற்றும் யாதவர்களின் வாக்குகளை குறி வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x