Published : 18 Jan 2019 10:29 AM
Last Updated : 18 Jan 2019 10:29 AM
புதுடெல்லியில் திருமணப் பந்தலிலேயே மணமகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்தாக்குதலில் ஈடுபட்டவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் சர்கார்பூர் எனும் இடத்தில் நேற்று நடைபெற்ற இச்சம்பவத்தின் விவரம் வருமாறு:
மணமக்கள் இருவரும் மேடைக்கு வந்தவுடன் மாலையை மாற்றிக்கொள்ளத் தயாராகினர். அப்போது திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. மணமகள் காலில் குண்டடிபட்டு துடிதுடித்து மணமேடையிலேயே விழுந்தார். இத்தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், கையில் துப்பாக்கியோடு மண்டபத்திலிருந்து மற்றவர்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கியால் சுடப்பட்ட மணமகள், பூஜா (19), உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் உடல்நிலை சரியான பிறகு மணமகள் மீண்டும் மணமேடைக்கு வரவழைக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட போலீஸார் இது குறித்து தெரிவிக்கையில், ''துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார் என்பதை மணமகள் பார்த்துள்ளார். அவர் யார் என்பதும் அவருக்குத் தெரிந்துள்ளது. ஆனால், மணமகன் அந்நபரை நாங்கள் காண முடியவில்லை என்று கூறினார். தாக்குதலில் ஈடுபட்டவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இத்துப்பாக்கிச் சூடு வேண்டுமென்றே நடத்தப்பட்டதா இல்லையா என்பதை அறிய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT