Published : 06 Jan 2019 09:12 AM
Last Updated : 06 Jan 2019 09:12 AM
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 2 தொகுதி களில் மட்டும் போட்டியிடுவதாக இருந்தால் தங்களுடன் கூட்டணி அமைக்கலாம் என காங்கிரஸுக்கு பகுஜன் சமாஜும், சமாஜ்வாதி கட்சியும் நிபந்தனை விதித்திருப்ப தாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இணையவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப் படுகிறது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் டெல்லியில் நேற்று 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, சோனியா காந்தி யின் ரேபரேலி மற்றும் ராகுல் காந்தியின் அமேதி ஆகிய 2 தொகுதி களை மட்டும் காங்கிரஸுக்கு ஒதுக்குவது என அவர்கள் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2 தொகுதிகளை ஏற்பதாக இருந்தால் காங்கிரஸ் தம்மோடு சேரலாம் என நிபந்தனையும் விதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தற்போது, உத்தரபிரதேச மாநில அமைச்சராக இருக்கும் சுஹல் தேவ், பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்பிஎஸ்பி) தலைவர் ஓம் பிர காஷ் ராஜ்பர் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்து விலகி சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியில் சேரும் வாய்ப்பு ஏற் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க மாயாவதியும், அகிலேஷும் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சமாஜ்வாதி கட்சி வட்டாரம் கூறுகையில், "காங்கி ரஸுக்கு ஒதுக்குவதாக இருந்த 6 தொகுதிகள் தற்போது 2-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கூட்டணியில் சேர்வதால் காங்கிரஸுக்குதான் அதிக லாபம்" எனத் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT