Last Updated : 04 Jan, 2019 12:25 PM

 

Published : 04 Jan 2019 12:25 PM
Last Updated : 04 Jan 2019 12:25 PM

இந்தியா பாதுகாப்பானதாக இல்லை என்று சொல்பவர் மீது வெடிகுண்டு வீச வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

இந்தியா பாதுகாப்பான தேசமில்லை என்று சொல்பவர் மீது வெடிகுண்டு வீச வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ.ஒருவர் சர்ச்சையாகப் பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகரைச் சேர்ந்த எம்.எல்.ஏ., விக்ரம் சானி. இவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தியாவைப் பாதுகாப்பான தேசமாக உணர முடியவில்லை எனக் கூறுபவர்கள் துரோகிகள். இந்தத் துரோகிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், இந்தியாவில் பாதுகாப்பாக உணரவில்லை; இங்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று கூறுபவர்கள் மீது வெடிகுண்டு வீச வேண்டும்.

இவர்களுக்கு நமது தேசத்தின் நன்மதிப்பீடுகளை மதிக்கத் தெரியவில்லை. அப்படிப்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாட்டில் குடியேறலாம்.

இப்படிப்பட்ட துரோகிகளைக் கையாள எனக்கு அரசாங்கம் மினிஸ்ட்ரி ஆஃப் பாம்ப் அதாவது வெடிகுண்டு இலாகா ஒதுக்க வேண்டும்" என விக்ரம் சானி கூறியுள்ளார்.

அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x