Last Updated : 02 Jan, 2019 11:10 AM

 

Published : 02 Jan 2019 11:10 AM
Last Updated : 02 Jan 2019 11:10 AM

சபரிமலைக்கு எந்தப் பெண் வந்தாலும் பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தேன்- பினராயி விஜயன்

சபரிமலைக்கு எந்தப் பெண் வந்தாலும் பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐயப்பனைத் தரிசிக்க வந்த ஏராளமான பெண்கள், பக்தர்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு தரிசிக்காமல் திரும்பினர். திருநங்கைகள் 4 பேர் மட்டும் பலத்த பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், 21 நாள் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே கடந்த 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.

இந்த சூழலில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.45 மணி அளவில் கோழிக்கோடு கோயிலாண்டி பகுதியைச் சேர்ந்த பிந்து, மலப்புரம் அங்காடிபுரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் இன்று அதிகாலை சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது,''இன்று சபரிமலை கோயிலுக்குள் இரண்டு பெண்கள் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். சன்னிதானத்துக்குள் செல்ல விரும்பும் அனைத்துப் பெண்களுக்கும் முடிந்த அளவுக்கு அனைத்துப் பாதுகாப்பையும் வழங்கவேண்டும் என்று முன்னதாகவே காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தோம்'' என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x