Published : 22 Jan 2019 09:04 PM
Last Updated : 22 Jan 2019 09:04 PM
லண்டனில் சையத் ஷுஜா என்ற சுய-பிரஸ்தாப சைபர் நிபுணர் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று அறிவித்தார், இதனையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய டெல்லி போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் இது தொடர்பாக டெல்லி போலீஸ் உதவி ஆணையருக்குக் கடிதம் எழுதி இவ்வாறு ஹேக் செய்ய முடியும் என்று ஷுஜா கூறியதன் மூலம் அவர் பொதுவெளியில் தொந்தரவு செய்துள்ளார். இது இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 505(1) (பி)-யின் கீழ் குற்றமாகும்.
உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் தங்களது தீர்ப்புகளில் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பல்வேறு அரசியல் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகங்களை எழுப்ப ஜூன் 2017-ல் தேர்தல் ஆணையம் தங்கள் எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? என்று நிபுணர்களுக்கு ஓபன் சாலஞ்ச் விடுத்தது.
“ஒருவரும் அத்தகைய நிரூபிப்புக்கு வரவேயில்லை” என்று தேர்தல் ஆணையம் தன் புகாரில் தெரிவித்தது. மேலும் ஷூஜாவின் செயல் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.
அமெரிக்காவில் இருக்கும் ஷூஜா ஸ்கைப் மூலம் லண்டன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதாவது மின்னணு வாக்குசாவடி வடிவமைப்பு குழுவில் தான் இருப்பதாகவும் தன்னால் ஹேக் செய்ய முடியும் என்று அதில் கூறியது சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய டெல்லி போலீஸுக்கு அறிவுறுத்தியுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT