Published : 25 Jan 2019 04:14 PM
Last Updated : 25 Jan 2019 04:14 PM
மத்திய பாதுகாப்புத்துறையில் திறம்படப் பணியாற்றாத ஐந்து உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, மத்திய அமைச்சரான நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் ஒவ்வொரு வருடமும் தணிக்கை நடைபெறுவது வழக்கம். இதில், நிதி செலவு உட்பட அலுவலகத்தின் பல்வேறு செயல்பாடுகள் சரிபார்க்கப்படுகிறது.
இந்தவகையில், பாதுகாப்புத்துறையின் குடிமைப்பணி அதிகாரிகள் சுமார் 500 பேரின் செயல்பாடுகளும் தணிக்கை செய்யப்பட்டது. இதற்கு, 30 வருடப்பணியுடன் 55 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டது.
இதன்படி, ஐந்து உயர் அதிகாரிகள் திறம்படப் பணியாற்றவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதற்காக பாதுகாப்புத்துறையின் பரிந்துரையை ஏற்று 5 பேருக்கும் கட்டாய ஓய்வளிக்க கடந்த செவ்வாய் கிழமை அதன் அமைச்சர் நிர்மலா உத்தரவிட்டுள்ளார்.
இதுபோல், கட்டாய விடுப்பு இதற்கு முன்பும் கடந்த ஆகஸ்ட் 2017-ல் 13 உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இவர்கள் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்தனர்.
உ.பி.யில் கைவிடப்பட்ட முயற்சி
இந்த திட்டத்தை பாஜக ஆளும் உபி அரசும் தன் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கத் திட்டமிட்டது. ஆனால், இதற்கு அதிகாரிகள் இடையே கிளம்பிய கடும் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT