Last Updated : 22 Jan, 2019 08:40 PM

 

Published : 22 Jan 2019 08:40 PM
Last Updated : 22 Jan 2019 08:40 PM

குடியரசு தினத்தில் ரயில் பயணம் தவிர்க்கக் கோரி தியோபந்த் மதரஸா தம் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

புதுடெல்லி: வரும் ஜனவ்ரி 26 அன்றைய குடியரசு தினத்தில் ரயில் பயணங்களை தவிர்க்குமாறு உபியின் தியோபந்த் மதரஸா தன் மாணவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவலை தன் மாணவர்களுக்கான சுற்றறிக்கையில் வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து உலகப்புகழ் பெற்ற மதரஸாவான தாரூல் உலூம் மாணவர் விடுதியின் வார்டனான மவுலானா முனீர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில் அவர், ‘வருடந்தோறும் குடியரசு தினத்தன்று பாதுகாப்பு காரணமாக போலீஸார் முக்கிய இடங்களில் கூடுதலான சோதனை நடத்துகின்றனர். இதனால், பலரும் சித்ரவதைக்கு உள்ளாகி அச்சுறுத்தலான சூழல் உருவாகிறது. எனவே, மதரஸாவின் மாணவர்கள் குடியரசு தினத்தில் ரயில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கலாம்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மதரஸாவில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் தாடி மற்றும் தொப்பியுடன் காணப்படுவது வழக்கம். இந்த தோற்றத்தில் உள்ளவர்களிடம் பாதுகாப்பு படையினர் பெரும்பாலும் கூடுதலான சோதனை நடத்துகின்றனர்.

 

இதிலும், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் பாதுகாப்பு படையினரின் சோதனை அவர்களிடம் அதிகமாகி விடுகிறது. இதை மனதில் வைத்து தாரூல் உலூம் மதரஸாவின் வார்டன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x