Last Updated : 08 Jan, 2019 06:53 PM

 

Published : 08 Jan 2019 06:53 PM
Last Updated : 08 Jan 2019 06:53 PM

மரபணு மாற்ற பருத்தி விதை: அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மான்சான்ட்டோவுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவின் மான்சான்ட்டோ நிறுவனம் இந்தியாவில் விற்கும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைக்கு காப்புரிமைத் தொகைக்கு உரிமை கொண்டாடலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

 

முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமெரிக்க நிறுவமான மான்சான்ட்டோ ஜிஎம் பருத்தி விதைகளுகு காப்புரிமை கோர முடியாது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாயன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற தீர்ப்பைப் பின்னுக்குத் தள்ளி காப்புரிமை கோரலாம் என்று கூறியுள்ளது.

 

இதன் விளைவாக அயல்நாட்டு வேளாண் நிறுவனங்களான மான்சாண்ட்டோ,  பேயர், டுபாண்ட் பயனீர் மற்றும் சின்ஜெண்ட்டா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் விற்கப்படும் தங்களது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கான காப்புரிமையைக் கோரலாம்.

 

“இது மிகவும் நல்ல நகர்வு, காப்புரிமை பிரச்சினை நிலுவையில் இருந்ததால் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அளிப்பதை நிறுத்தி விட்டது. காரணம் காப்புரிமை விதிகள்” என்று ஷேட்காரி சங்கட்னா என்ற விவசாயிகள் அமைப்பின் தலைவர் அஜித் நார்தே தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு புதிய வேளாண் தொழில்நுட்பம் தேவை என்று வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 

உயர் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தினால்தான் இந்திய விவசாயிகள் உலக அரங்கில் சந்தைப் போட்டியில் நிற்க முடியும் என்று நார்தே கருதுகிறார்.

 

ராயல்டி தகராறு:

 

உள்நாட்டு விதைகள் நிறுவனமான நுழிவீடு விதைகள் லிட் நிறுவனம் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் மான்சாண்ட்டோ உரிமை கொண்டாட முடியாது என்று வாதிட்டு மனு செய்ததையடுத்து டெல்லி உயர் நீதிமன்றம் மான்சாண்ட்டோவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.  2015-ம் ஆண்டு மான்சாண்ட்டோ நிறுவனம் நுழிவீடு லிட் நிறுவனத்துடனான தன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது.

 

இந்திய பருத்தி உற்பத்தியில் 90% ஜிஎம் காட்டன் தொழில்நுட்பமே ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x