Published : 02 Jan 2019 08:52 AM
Last Updated : 02 Jan 2019 08:52 AM
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை பறித்தது காங்கிரஸ்.
சத்தீஸ்கரில் மட்டும் அதிக தொகுதிகளை பெற்ற காங்கிரஸுக்கு ராஜஸ்தானில் தனி மெஜாரிட்டிக்கும் அதிகமாக ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தேவைப்பட்ட மூன்று தொகுதிகள் ஆதரவை மாயாவதியின் பகுஜன் சமாஜும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும் அளிக்க வேண்டியதாயிற்று. எனினும், வரும் மக்களவை தேர்தலில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தனித்தே போட்டியிடக் காங்கிரஸ் முடிவு செய்ததாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘வரும் தேர்தல் அனைத்திலும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. ஆனால், இதற்கான ஒத்துழைப்பு கிடைக்கும் மாநிலங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்வோம். பாஜகவின் செயல்பாடுகள் காரணமாக கூட்டணி வைப்பதன் மூலம் கிடைக்கும் தொகுதிகளை விட, தனித்து போட்டியிட்டாலே காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளதால் இந்த முடிவை ராகுல் எடுத்துள்ளார்’’ எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, காங்கிரசை எதிர்த்து தொடங்கப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியுடன் தெலங்கானா வில் கூட்டணி வைத்து போட்டி யிட்டு காங்கிரஸுக்கு பல னில்லை. இதைவிட தனித்து போட்டியிட்டிருந்தால் இருவருக் கும் அதிக தொகுதிகள் கிடைத் திருக்கும் எனக் கருதப்படுகிறது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் ஆந்திரா, தெலங் கானாவில் காங்கிரஸ் தனித்து அல்லது நட்பு ரீதியான போட்டி யில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிண மூல் காங்கிரஸ் மிகக்குறைந்த தொகுதிகளையே காங்கிரஸுக்கு ஒதுக்க விரும்புகிறது. இதனால், அங்கும் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது. உபியில் மாயாவதி, அகிலேஷ் மற்றும் அஜீத் சிங் கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமளிக்க மறுக்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப், ஹரியானா மற்றும் டெல்லியில் தம்மை எதிர்த்து வளர்ந்து வரும் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மியுடனும் சேர்வதால் பலனிருக்காது என ராகுல் கருதுகிறார். அசாமில் பத்ரூத்தீன் அஜ்மலின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் இணைந் தாலும் பலனில்லை என காங்கிரஸ் உணர்ந்துள்ளது. எனவே, அங்கும், தனித்தே போட்டியிட கட்சி முடிவு செய்துள்ளது. எனவே, மக்களவை தேர்தலில் தமிழகம், கர்நாடகா மற்றும் பிஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT