Last Updated : 31 Jan, 2019 12:16 PM

 

Published : 31 Jan 2019 12:16 PM
Last Updated : 31 Jan 2019 12:16 PM

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: ராம்கார் தொகுதியில் காங்கிரஸ் அபார வெற்றி

ராஜஸ்தான் மாநிலம், ராம்கார் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷாபியா ஜுபைர் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஹரியானாவில் உள்ள ஜிந்த் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளரும், செய்தித்தொடர்பாளருமான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா 3-வது இடத்தில் உள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள ராம்கார் சட்டப்பேரவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த லட்சுமண் சிங் தேர்தல் நேரத்தில் திடீரென காலமானதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஹரியானாவின் ஜிந்த், ராஜஸ்தானின் ராம்கார் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் ஷாபியா ஜூபைர் கான், பகுஜன் கட்சி சார்பில் ஜகத் சிங், பாஜக சார்பில் சுக்வந்த் சிங் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நடந்துமுடிந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் ராம்கார் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷாபியா ஜூபையர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுக்வந்த் சிங்கைக் காட்டிலும் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஷாபியா 83 ஆயிரத்து 304 வாக்குகளும், பாஜக வேட்பாளர் சுக்வந்த் சிங் 71 ஆயிரத்து 53 வாக்குகளும், பிஎஸ்பி வேட்பாளர் 24 ஆயிரத்து 847 வாக்குகளும் பெற்றனர்.

இதையடுத்து, 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 100 எம்எல்ஏவாக உயர்ந்துள்ளது.

ஹரியானாவின் ஜிந்த் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அங்கு பாஜக வேட்பாளர் கிருஷ்ணா மிதா முன்னிலையில் இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா 3-ம் இடத்தில் இருந்து வருகிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x