Published : 21 Sep 2014 10:31 AM
Last Updated : 21 Sep 2014 10:31 AM
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ள எச்.எல்.தத்துவுக்கு எதிராக தொடரப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் 28-ம் தேதி எச்.எல்.தத்து பொறுப்பேற்க உள்ளார். அவரது நியமனத்துக்கு கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த நிஷா பிரியா பாட்டியா என்பவர் தத்து மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து, அவரது தலைமை நீதிபதி பதவி நியமனத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் ஆஜராகி, ‘இந்த வழக்கில் அடிப்படை ஆதாரம் இல்லை. சிறுமைத்தனமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்கக் கூடாது’ என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரோஹிணி, நீதிபதி பிரதீப் நந்த்ரஜோக் அளித்துள்ள தீர்ப்பு:
வழக்கு தொடர்ந்துள்ள பெண் 1987-ம் ஆண்டு கிளாஸ்-1 அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு ‘ரா’ உளவுப் பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றி உள்ளார். அவருக்கு 2009-ம் ஆண்டு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. பணி தொடர்பாக அவர் பல்வேறு புகார் மற்றும் வழக்குகளை தொடர்ந்துள்ளார். அப்போது நீதிபதி தத்து வழக்குகளை விசாரித்துள்ளார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அவர் பணியாற்றிய இடத்தில் சில அதிகாரிகள் மீது புகார் கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத் தில் பணியாற்றி வரும் சில மரியாதைக்குரிய பெண் வழக்கறி ஞர்களையும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். அதற்கான ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை.
அவரது மனுவை பார்க்கும் போது, அவர் உண்மை நிலைக்கு தொடர்பில்லாத கற்பனை நிலையில் இருந்து கொண்டு குற்றச் சாட்டுகளை கூறுவது தெளிவா கிறது. பிடிக்காதவர்களை தண்டிப் பதற்காக நீதிமன்றம் இயங்க வில்லை.
புத்தி சுவாதீனம் இல்லாத வரைப்போல் மனுதாரர் செயல்படுகிறார். எனவே இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT