Last Updated : 14 Jan, 2019 02:28 PM

 

Published : 14 Jan 2019 02:28 PM
Last Updated : 14 Jan 2019 02:28 PM

ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் ஏறி இறங்குவதைத் தடுக்க நீலநிற விளக்கு

ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் ஏறி இறங்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க ரயில் வண்டிகளில் நீல நிற எச்சரிக்கை விளக்கு பொருத்த மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் மின்சார ரயில்கள் என்பது முக்கியப் போக்குவரத்து அம்சம். அதுவும் மும்பையில் மின்சார ரயில் பயணம் யாரும் தவிர்க்க இயலாத ஒன்று. அதேவேளையில் அந்த ரயில்களில் பயணிப்பவர்கள் உயிரைப் பணயம் வைத்து ஏறி இறங்குவதால் விபத்துகளும் தடுக்க முடியாதவை ஆகிவிட்டன.

இதனைத் தடுக்கவே மத்திய ரயில்வே வாரியம் ஒரு புது முயற்சியை எடுத்திருக்கிறது. இதன் மூலம் மின்சார ரயில்களின் கதவுகளில் நீல நிற விளக்குகள் பொருத்தப்படும் . 

இந்த விளக்குகள் ரயில் ஒரு குறிப்பிட்ட வேகத்தைப் பிடிக்கும்போது ஒளிரத் தொடங்கும். இது ஒளிர்ந்தால் பயணிகள் ரயிலில் ஏறுவதோ இறங்குவதோ உயிருக்கு ஆபத்து என்று அர்த்தம்.

இதைப் பார்க்கும் பயணிகளுக்கு நிச்சயமாக  உளப்பூர்வமாக ஓர் எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டு ஓடும் ரயிலில் ஏறி இறங்குவதற்கான உந்துதல் குறையும் என கணிக்கப்படுகிறது.

இந்த புதிய நீல நிற விளக்குகளைப் பொருத்தும் பணி தொடங்கியிருக்கிறது. மக்கள் வரவேற்பைப் பொறுத்து இந்த விளக்குகள் மும்பை மின்சார ரயில்களில் பொருத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x