Published : 11 Jan 2019 08:10 AM
Last Updated : 11 Jan 2019 08:10 AM
மத்திய அரசால் புதிதாக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் புதிய இடமாக, திருவாரூர் மாவட்டத்தின் திருக்காரவாசல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஏஎல்பி-1 என்ற பிரிவின் கீழ் 55 வட்டாரங்களுக்கான ஏலம் டிஜிஎச் (ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம்) சார்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் விடப்பட்டது. இதில் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் 2 வட்டாரங்கள் உள்ளன.
இந்நிலையில் ஓஏஎல்பி-2 என்ற பிரிவின் கீழ் மேலும் 14 வட்டாரங்களுக்கான ஏல அறிவிப்பு கடந்த 7-ம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் 494.19 சதுர கி.மீ. பரப்பளவில் மேலும் ஓரிடம் அமைந்துள்ளது. இதில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மையப்பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் அமைந்துள்ளது. கஜா புயலால் அண்மையில் பாதிக்கப்பட்ட இப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டிஜிஎச் அதிகாரிகள் கூறும்போது, “ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் புதிய நிலப்பகுதியை ஏலம் எடுக்க தனியார் நிறுவனங் கள் முன்வருமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. இது தொடர்பாக தமிழக விவசாயிகளிடம் விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடத்த உள் ளோம்” என்று தெரிவித்தனர்.
ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த ஆண்டு 55 வட்டாரங் களுக்கான ஏலம் விடப்பட்டதில் மிக அதிக அளவாக வேதாந்தா நிறுவனம் 41 இடங்களை ஏலம் எடுத்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் இந்த நிறுவனம், தமிழகத்தின் 2 இடங்களை ஏலம் எடுத் துள்ளது.
இந்நிலையில் ஓஏஎல்பி-2 பிரிவி லும் தமிழகம் உள்ளிட்ட பெரும் பாலான வட்டாரங்களை வேதாந்தா ஏலம் எடுக்கும் என எதிர்பார்க் கப்பட்டது. ஆனால், இந்தமுறை அந்நிறுவனம் எந்த வட்டாரத்தை யும் ஏலம் எடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வேதாந்தா அதிகாரி கள் வட்டாரம் கூறும்போது, “ஏற்கெனவே ஏலம் எடுத்த வட்டாரங்களில் பணி அதிகமாக உள்ளது. இதனால், ஓஏஎல்பி 2-ல் ஏலம் எடுக்கும் நிலையில் நிறுவனம் இல்லை. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தத்துக்கு பிறகு உரிமங்கள் பெறும் பணி நடை பெறுகிறது” என்றனர்.
இதனால் ஏலம் எடுக்க புதிய நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கத்தில் லண்டன் உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களில் டிஜிஎச் சார்பில் கருத்தரங்குகள் நடை பெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT