Published : 14 Dec 2018 07:47 AM
Last Updated : 14 Dec 2018 07:47 AM
மூன்று மாநில தேர்தலில் தன்னிடம் இருந்த பெருமளவிலான தனித் தொகுதிகளை பாஜக இழந்துள் ளது. அவை காங்கிரஸுக்கு மாறி யுள்ளன. மத்திய தேர்தல் ஆணை யம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இந்தத் தகவல் தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கரில் 39, ம.பி.யில் 36 மற்றும் ராஜஸ்தானில் 30 சதவிகித இடங்கள் பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக் கப்பட்டுள்ளன. இந்த மூன்றிலும் தன் ஆட்சியை இழந்த பாஜக, தன்னிடம் இருந்த 137 தனித்தொகு திகளில் 71-ஐயும் இழந்துள்ளது. ராஜஸ்தான் தவிர மற்றும் 2 மாநிலங்களில் பாஜக இதுவரை இல்லாத அளவில் தனித்தொகுதி களின் வாக்குகளை இழந்துள்ளது. அதேநேரத்தில், அங்கு காங்கிர ஸின் வாக்குகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில், 59 தனித்தொகு திகள் உள்ளன. இவற்றில் 34 மிக வும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 25 பழங்குடிகளுக்கும் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 31 தனித்தொகுதிகளைப் பெற்றுள்ளது. 2013 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக பெற்றிருந்த 50-ல் 21 மட்டுமே தற்போது மிஞ்சியுள்ளது.
பழங்குடியினர் தொடங்கிய புதிய பகுஜன் பழங்குடி கட்சி (பிடிபி) 2 தனித்தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ம.பி.யில் 82 தனித்தொகுதி களில் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கு 35, பழங்குடிகளுக்கு 47 உள்ளன. இந்த 82-ல் பாஜக இந்த தேர்தலில் 25-ஐ இழந்துள் ளது. காங்கிரஸ் 26 தனித்தொகுதி களை கூடுதலாகப் பெற்றுள்ளது. இவற்றில் காங்கிரஸுக்கு ம.பி.யின் தேர்தலில் பழங்குடியினர் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
சத்தீஸ்கரில் மிக அதிகமாக உள்ள 39 தனித்தொகுதிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 10, பழங்குடியினருக்கு 29 உள் ளன. இவற்றில் காங்கிரஸ் 33, பாஜக 4 மற்றும் இணைந்து போட்டி யிட்ட கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சத்தீஸ்கர் ஜனதா காங்கி ரஸுக்கு தலா ஒரு தனித்தொகுதி கிடைத்துள்ளன.
இந்த முறை தேர்தலில் பாஜக தனது 16 தனித்தொகுதிகளை இழந்துள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 14 தனித்தொகுதிகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. இவற்றில் பழங் குடிகளின் தொகுதிகள் அதிகம். இரண்டு தேர்தல்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனித் தொகுதிகளில், பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற ஒன்றில் எந்த மாற்றமும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT