Last Updated : 20 Sep, 2014 10:45 AM

 

Published : 20 Sep 2014 10:45 AM
Last Updated : 20 Sep 2014 10:45 AM

நாளந்தா பல்கலை. வளர்ச்சிக்கு ரூ. 2,727 கோடி ஒதுக்கீடு: சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

வரலாற்று சிறப்புமிக்க நாளந்தா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூ.2,727 கோடி ஒதுக்கியுள்ளது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

பிஹாரின் பழம்பெரும் பன்னாட்டு கல்வி மையமான நாளந்தா பல்கலைக்கழகம் 12-ம் நூற்றாண்டில் துருக்கியப் படைகளால் சிதைக்கப்பட்டது.

இதன் சிதைவுகள் எஞ்சியிருக் கும் இடத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் ராஜ்கிர் நகரில் இப்பல்கலைக்கழகம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

800 ஆண்களுக்குப் பிறகு, இந்தப் பல்கலைக்கழகத்தில் 15 மாணவர்கள் 6 பேராசிரியர்களுடன் கடந்த 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கின.

இந்நிலையில் பல்கலைக் கழகத்தை முறைப்படி தொடங்கி வைக்கும் விழா ராஜ்கிர் நகரில் நேற்று நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதனை தொடங்கிவைத்தார்.

விழாவில் அமைச்சர் பேசும்போது, “நாளந்தா வெறும் பல்கலைக்கழகம் மட்டுமல்ல. ஒரு பாரம்பரியம். பராம்பரியம் ஒருபோதும் அழியாது.

இந்தப் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்த ஆதரவை கண்டவுடன், கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமன்றி பிற நாடுகளில் இருந்தும் இங்கு மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்க ளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே ரூ. 2,727 கோடி ஒதுக்கியுள்ளது. முந்தைய அரசு 455 ஏக்கர் நிலம் வழங்கியதை தொடர்ந்து இத்தொகை தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் ஒதுக்கப்பட்டது.

இத்தொகையிலிருந்து கட்டிடங் கள் மற்றும் பிற கட்டமைப்பு வசதிகள் இன்னும் 10 ஆண்டு களில் செய்துமுடிக்கப்படும்” என்றார்.

விழாவில் பங்கேற்ற பிஹார் முதல்வர் ஜிதம்ராம் மாஞ்சி, “வெளிநாட்டு மாணவர்கள், அறிஞர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இங்கு விமான நிலையம் அமைக்கப்படவேண்டும்” என்றார்.

இந்தக் கோரிக்கையை ஆதரிப்பதாக சுஷ்மா கூறினார்.

விழாவில், சிங்கப்பூர், தாய் லாந்து, ஆஸ்திரேலியா, வியட்நாம், ஜெர்மனி, ஜப்பான், லாவோஸ் ஆகிய நாடுகளின் தூதரக அதி காரிகள், வெளியுறவுத் துறை செய லாளர் (கிழக்கு) அனில் வாத்வா, பல்கலைக்கழக துணைவேந்தர் கோபா சபர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x