Published : 08 Dec 2018 08:44 AM
Last Updated : 08 Dec 2018 08:44 AM
மகாத்மா காந்தியடிகளால் தொடங் கப்பட்ட ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் நடத்தப்படும் இரண்டு பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஹரிஜன சேவா சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் மொத்தம் 12 பள்ளிகள் அமைக்கப்பட்டிருந்தன. போதிய நிதிவசதி இல்லாததால் அவை படிப்படியாக மூடப்பட்டு, தற்போது 4 பள்ளிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. இவற்றில் இரண்டு, கோபி செட்டிப்பாளையத்தின் தக்கர் பாபா ஆரம்பப் பள்ளி மற்றும் திண்டுக்கல்லில் பாரதி நடுநிலைப் பள்ளி ஆகும். இவை இரண்டும், தமிழக அரசின் நிதியுதவியால் சிறப்பாக நடைபெற்று வருவ தாகக் கூறப்படுகிறது.
அதேசமயத்தில், மதுரையில் உள்ள என்.எம்.ஆர். சுப்புராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளியும், விழுப்புரத்தின் திருக் கோவிலூரில் உள்ள உறைவிட நடுநிலைப் பள்ளி’யும் போதிய நிதிஉதவி கிடைக்காமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதற்கான நிதியை, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கடந்த 2014-15 கல்வி யாண்டு முதல் 4 வருடங்களாக நிலுவையில் வைத்திருக்கிறது.
ஹரிஜன சேவா பள்ளிகளைப் பொறுத்தவரை, ஒரு பள்ளிக்கு ஆண்டு செலவினமாக 80 சதவீத தொகையான ரூ.15 லட்சத்தை மத்திய அரசு அளிக்கும். மீதி இருபது சதவீதத்தை ஹரிஜன சேவா சங்கம் செலவிட வேண்டும்.
இதுகுறித்து, ஹரிஜன சேவா சங்கத்தின் தமிழகச் செயலாளரும், காந்தியவாதியுமான ஆர்.சீனி வாசன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் அமைச்சக அதிகாரி களைச் சந்தித்து நெருக்கடி நிலைமையை விளக்கிய பின் நிலுவை தொகையை விரைவில் அளிப்பதாக உறுதி கூறினர். 26 மாநிலங்களில் இருந்த எங்கள் சங்கப் பள்ளிகளில் 8 மட்டுமே தற்போது இயங்குகிறது. மீதமுள்ள பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹரிஜன சேவா சங்கத்தின் தேசியத் தலைவரான சங்கர் குமார் சன்னியால் மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தும் பள்ளிகளும் மத்திய அரசின் நிதி நிலுவையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
காந்தி தொடங்கிய துப்புரவுத் தொழிலாளர் ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற பல இயக்கங் கள் மூடப்பட்டு விட்டன. ஹரிஜன சேவா சங்கத்தின் பள்ளிகளும் தற்போது மூடப்படும் ஆபத்து உருவாகியுள்ளதாக கல்வியாளர் கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT