Published : 09 Dec 2018 08:30 AM
Last Updated : 09 Dec 2018 08:30 AM

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலிக்குமா? ஆந்திரா, தெலங்கானாவில் சூதாட்டம்; கோடிக்கணக்கில் ஏராளமானோர் பணம் கட்டி வருகின்றனர்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பலிக்குமா? காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்பது குறித்த சூதாட்டம் சூடுபிடித்துள் ளது. இதற்காக தெலங்கானா மட்டுமின்றி, அண்டை மாநிலமான ஆந்திராவிலும் கோடிக்கணக்கில் பணம் கட்டி வருகின்றனர்.

தெலங்கானா உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதனி டையே, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால், வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் முடிவை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பான கருத்துகள், காரசாரமான விவாதங்கள், மீம்ஸ்கள் சமூக ஊடகங்களில் அனல் பறந்து வருகின்றன.

குறிப்பாக தெலங்கானாவில் எந்தக் கட்சி வெற்றி பெறும்? எந்த வேட்பாளர் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலிக்குமா? காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் யார்? உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைத்து ஒரு பிரிவினர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும், டீக்கடை முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை தெலங்கானா தேர்தல் விவ காரம் தற்போதைய பேசு பொரு ளாகி உள்ளது.

இதனால், ஹைதராபாத், வாரங்கல், கம்மம் ஆகிய தெலங்கானா நகரங்களிலும், விஜயவாடா, குண்டூர், திருப்பதி, சித்தூர், மதனபல்லி ஆகிய ஆந்திரா நகரங்களிலும் மறைமுக மாக கோடிக் கணக்கில் பணம் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.10 ஆயிரம் முதல், லட்சக் கணக்கில் பணம் கட்டி வருவதாக திருப்பதி போலீஸாருக்கு தகவல்கள் வந்ததால், நேற்று சித்தூர் மாவட்டத் தில் பல இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்ட னர். ரூ.500 கோடிக்கும் மேல் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், ஜனசமிதி ஆகியவை கூட்டணி அமைத்த பிறகு நிலைமை சற்று மாறியது. இந்தக் கூட்டணியை ஆதரித்து ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். இத னால் டிஆர்எஸ் கட்சியின் வெற்றி கேள்விக் குறியாகி உள்ளது. அதேநேரம் ஒருவேளை காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்தும் விவாதம் நடைபெற்று வருகிறது. மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான உத்தம் குமார் ரெட்டி அல்லது ரேவந்த் ரெட்டி முதல்வராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை

ஹைதராபாத் மாநகராட்சி ஆணையர் கிஷோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, “மொத்தம் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு அதிகாரி, துணை அதிகாரி, கண்காணிப் பாளர் ஆகியோர் பணியமர்த்தப் படுவர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப் படும். 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியும்” என்றார்.

கோயில்களில் சிறப்பு பூஜை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் டிஆர்எஸ் கட்சிக்கே சாதகமாக இருந்தாலும், விஜயவாடாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான லகடபாடி ராஜகோபால் நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கூட்டணி 75 முதல் 85 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.

இவரது முந்தைய கணிப்புகள் சரியாக இருந்ததால், தேசிய ஊடக கருத்துக் கணிப்புகள் அடிபட்டு போகுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால், வேட்பாளர்கள் கோயில் கோயிலாக சென்று, தாங்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x