Last Updated : 11 Dec, 2018 11:22 AM

 

Published : 11 Dec 2018 11:22 AM
Last Updated : 11 Dec 2018 11:22 AM

சிதறிவரும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள்: 3 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் அதிக தொகுதிகளில் முன்னணி

மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் சிதறும் நிலை தெரிகிறது. காங்கிரஸ் அல்லாத இதர கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

ராஜஸ்தான், ம.பி. மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆளும் பாஜகவிற்கு எதிரான அலை இந்த முறை தேர்தலில் நிலவியது. இதனால், பாஜகவிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. ஆனால், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன. சத்தீஸ்கரின் முன்னாள் முதல்வர் அஜீத் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மாயாவதி போட்டியிட்டார்.

இந்நிலையில், மாயாவதி கட்சி ம.பி.யின் ஆறு தொகுதியில் முன்னணி வகிக்கிறது. இங்கு அக்கட்சி கடந்தமுறை 2013-ல் வெறும் மூன்று தொகுதிகளில் வென்றிருந்தது. ம.பி.யில் இதர கட்சிகள் ஏழு தொகுதிகளில் முன்னணியில் உள்ளன. சத்தீஸ்கரில் ஜோகி-மாயாவதி கூட்டணி பத்து இடங்களில் முன்னணி வகிக்கிறது.

ராஜஸ்தானில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட இதர கட்சிகள் 14 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் கிடைத்த தோல்வி காங்கிரஸின் வெற்றியை ம.பி.யில் அச்சுறுத்தி வருகிறது.

ம.பி.யின் 230 தொகுதிகளில் காங்கிரஸ் 113 மற்றும் பாஜக 101 என முன்னணி வகிக்கின்றன. வாக்கு எண்ணிகை தொடங்கியதும் அதிகமாக இருந்த இந்த முன்னணி நிலை ம.பி.யில் குறைந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x