Published : 03 Dec 2018 09:54 AM
Last Updated : 03 Dec 2018 09:54 AM
‘‘டெல்லியில் செயற்கை மழையை வரவழைக்க, மேகங்கள் சரியான அளவு மற்றும் அடர்த்தி வருவதற் காகக் காத்திருக்கிறோம்’’ என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.
கடும் காற்று மாசுப்பாட்டால் தலைநகர் டெல்லி தவித்து வரு கிறது. அதனால் வாகனக் கட்டுப் பாடுகள் கடுமையாக விதிக்கப்பட் டுள்ளன. இந்நிலையில், காற்று மாசுப்பாட்டை தடுக்க அல்லது குறைக்க செயற்கை மழை வரவழைப்பதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் நேற்று கூறியதாவது:
டெல்லியில் மேகங்களின் அளவு மற்றும் அடர்த்தி சரியான அளவுக்கு கொண்டு வரவேண்டும். அத்துடன் இந்திய வானிலை ஆய்வு மையமும் சரியான நேரத்தை கணக்கிட்டு அனுமதி வழங்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறோம். அதற்கான முன் னேற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. சரியான நேரம் வந்தவுடன் செயற்கை மழையை வரவழைப்பதற்கான செயல் முறைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், காற்று மாசுப்பாட்டை தடுக்க பல்வேறு உத்திகள் ‘தேசிய தூய்மையான காற்று’ திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டங்கள் டிசம்பர் மாதம் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
செயற்கை மழையை வர வழைக்கும் முயற்சி கைகூடினால், டெல்லியில் காற்று மாசுப்பாடு குறையும் என்று அதிகாரிகள் கருது கின்றனர். எனினும், டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினைக்கு இந்த முயற்சி நீண்ட கால தீர்வாக இருக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
செயற்கை மழை என்றால் மேகத்தை செயற்கையாக உரு வாக்குவது அல்ல. எந்த இடத்தில் மழை பெய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த இடத் துக்கு மேலே காற்றழுத்தம் உரு வாக்குவது, பின்னர் மழை மேகங் களை அதிகரிக்க செய்வது, கடைசி யாக மேகங்களை குளிர செய்வது. இந்த 3 கட்ட செயல்முறைகளிலும் உப்பு, உலர் பனி மற்றும் பல் வேறு வேதிப்பொருட்கள் பயன் படுத்தப்படும். இந்த செயல் முறையை ‘மேக விதைப்பு’ என் கின்றனர்.
கான்பூரில் உள்ள ஐஐடி நிபுணர்கள், இதே முறையைப் பின்பற்றி ஏற்கெனவே லக்னோவில் செயற்கை மழையை வரவழைத்து வெற்றி பெற்றுள்ளனர். டெல்லியில் தற்போது காற்று மாசு அதிகமாக இருப்பதால், செயற்கை மழை வரவழைப்பதற்கு முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT