Published : 29 Dec 2018 05:38 PM
Last Updated : 29 Dec 2018 05:38 PM
உ.பி. மாநில புலந்த்ஷெஹரில் மாட்டிறைச்சி தொடர்பாக எழுந்த கண்மூடித்தனமான கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் உயரதிகாரி சுபோத் குமார் சிங் சுடப்படுவதற்கு முன்பாக கோடரியால் தாக்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கோடரியால் தாக்கியதாகக் கருதப்படும் குற்றவாளி கலுவா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். சுபோத் குமார் சிங்கிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்ட பிரசாந்த் நாத் என்பவனை போலீஸார் வியாழனன்று கைது செய்தனர். இந்நிலையில் சுடுவதற்கு முன்பாக போலீஸ் உயரதிகாரியைத் தாக்கிய மற்ற குற்றவாளிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு ஜீப் கதவில் தொங்கிக் கொண்டிருந்த அவர் உடலை ஒரு கும்பல் எரிக்க முயன்றதாக உயர் போலீஸ் அதிகாரி பிரபாகர் சவுத்ரி அதிர்ச்சித் தகவல் தெரிவித்தார்.
சுபோத் குமார் சிங்கைக் கொல்வதற்கு முன்னால் கோடாரியால் அவரை வெட்டிய கவுலா என்ற குற்றவாளிக்கு வலைவிரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இவரது கொலையில் 4-5 பேர் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த பயங்கர வன்முறைகள் குறித்த வீடியோ ஆதாரங்கள் உளவுத்துறை தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT