Last Updated : 14 Dec, 2018 07:38 PM

 

Published : 14 Dec 2018 07:38 PM
Last Updated : 14 Dec 2018 07:38 PM

சோனம் - துல்கர் இன்ஸ்டாகிராம் வீடியோ: அவசரப்பட்ட மும்பை போலீஸ்

விளையாட்டாக சமூக வலைதளங்களில் பதிவிடும் போஸ்ட்களோ அல்லது வீடியோக்களோ சில நேரங்களில் சிக்கலை உருவாக்கலாம்.

அப்படித்தான் பாலிவுட் நடிகை சோனம் கபூர், சக நடிகர் துல்கார் சல்மான் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர அது சச்சையை உருவாக பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் முழு வீடியோவையும் பதிவிட ஜகா வாங்கியிருக்கிறது மும்பை போலீஸ்.

ஜோயா ஃபேக்டர் என்ற படத்தில் துல்கர் சல்மான் - சோனம் கபூர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் காரில் செல்லும் காட்சி அடங்கிய வீடியோவைப் பகிர்ந்த மும்பை போலீஸ் ஏகத்துக்கும் அறிவுரை சொன்னது.

இருந்தது என்ன?

மும்பை போலீஸ் பகிர்ந்த அந்த வீடியோவில், துல்கர் சல்மான் கார் ஸ்டியரிங்கை இயக்காமல் ஃபோனில் ஏதோ செய்து கொண்டிருக்கிறார். கார் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அவர் சாலையையும் பார்க்கவில்லை காரையும் இயக்கவில்லை. இதை வீடியோவாக பதிந்த சோனம் கபூர் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சோனம் கபூர் "weirdo" (ஆபத்தானவர்) எனப் பதிவிட்டுள்ளார்.
இது மும்பை போலீஸின் கவனத்துக்கு வர அவர்களோ "நீங்கள் சொல்வதில் நாங்களும் உடன்படுகிறோம் சோனம்கபூர். இது நிஜமாகவே ஆபத்தானதுதான். இது மாதிரியான ஆக்‌ஷன்களை கார் ஓட்டும்போது செய்வது உடன் பயனிப்பவர்கள் உயிரையும் பணயம் வைப்பதற்கு சமம். இதை நாங்கள் சினிமாவில் செய்யக்கூட அனுமதிக்கமாட்டோம்" எனப் பதிவிட்டுள்ளனர்.

நடந்ததோ இதுதான்!

சோனம் கபூர், துல்கர் சல்மான் என இருவருக்கும் அறிவுரை சொல்லும் விதத்தில் போலீஸார் இந்த ட்வீட்டை பதிவு செய்திருந்தாலும்கூட இருவருமே இது சர்ச்சையானதையடுத்து முழு வீடியோவையும் பகிர்ந்தனர்.

அதில் வாகனத்தை முன்னால் செல்லும் ட்ரக் ஒன்று டோ செய்து இழுத்துச் செல்வது தெரியும். இந்த வீடியோ வெளியானதும் மும்பை போலீஸார் மன்னிப்பு கோரினர். ஆனால் நெட்டிசன்கள் மும்பை போலீஸை கலாய்க்க சோனம் கபூர் குறுக்கிட்டு போலீஸ் தனது கடமையை செய்தது. ஆனால், அவசரப்பட்டுவிட்டது. எனவே, அவர்களை கிண்டல் செய்ய வேண்டாம் என சமாதானம் கூறியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x