Last Updated : 27 Sep, 2014 10:05 AM

 

Published : 27 Sep 2014 10:05 AM
Last Updated : 27 Sep 2014 10:05 AM

அமெரிக்காவில் மோடியுடன் 3 வாரங்கள்: தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் பேட்டி

1994-ம் ஆண்டில் மோடியுடன் அமெரிக்கா சென்றவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் பாலசுப்பிரமணியனும் (67) ஒருவர். சேலத்தைச் சேர்ந்த அவர் தற்போது தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

அமெரிக்காவில் மோடியுடன் 3 வாரங்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை நினைவுகூர்ந்து ‘தி இந்து’-விடம் அவர் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: 1994-ல் மோடி யுடன் அமெரிக்கா சென்றேன். அப்போது ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய பொதுச் செயலாளராக இருந்தேன். மோடியுடன் தற்போதைய மத்திய அமைச்சர் அனந்தகுமார், பாஜக-வின் தெலங்கானா தலைவர் கிஷண் ரெட்டி ஆகியோர் வந்திருந்தனர். காங்கிரஸ் தரப்பில் குஜராத் அமைச்சராக இருந்த நரேஷ் ரவல், காங்கிரஸின் தற்போதைய அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் வந்திருந்தனர்.

அப்போது அமெரிக்காவில் தெற்கு டகோட்டா, மேரிலாண்ட், டெக்சாஸ், நியூயார்க், வாஷிங் டன் போன்ற இடங்களுக்குச் சென்று அந்த மாகாண ஆளுநர்கள், செனட்டர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண் டோம். அந்தப் பயணத்தின்போது இனிமையாகப் பழகிய மோடி, போகும் இடங்களிலெல்லாம் தங்கள் கட்சியின் கொள்கைகளை அழுத்தம், திருத்தமாக எடுத்து வைக்கத் தவறவில்லை. அந்த பயணத்துக்குப் பிறகு அவரை இருமுறை பார்த்தேன்.

கடைசியாக 2000-ம் ஆண்டில் பார்த்தேன். அப்போதும் என்னிடம் அன்புடன் நலம் விசாரித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x