Last Updated : 10 Dec, 2018 05:02 PM

 

Published : 10 Dec 2018 05:02 PM
Last Updated : 10 Dec 2018 05:02 PM

இன்று மூதறிஞர் ராஜாஜியின் 140-வது பிறந்த நாள்: நாடாளுமன்றத்தில் உருவப்படத்திற்கு மாலையணிவித்து தலைவர்கள் மரியாதை

இன்று சி.ராஜகோபாலாச்சரியின் 140-வது பிறந்த நாள். இதையொட்டி நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் அமைந்துள்ள ராஜாஜியின் உருவப்படத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் சுரங்கத்துறை அமைச்சரான நரேந்திரசிங் தோமர், மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் துணை பிரதமரும் மக்களவை மூத்த உறுப்பினருமான லால் கிருஷ்ண அத்வானி, நாடாளுமன்ற விவகாரத்துறையின் இணை அமைச்சர் விஜய் கோயல், மனிதவள மேம்பாட்டுத்துறையின் எம்.பி.க்கள் குழு தலைவர் டாக்டர்.சத்யநாரயண ஜதித்ய மற்றும் இந்திய கம்யூனிஸ்ய் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை மூத்த உறுப்பினருமான டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் நாடாளுமன்ற இருஅவைகளின் மேலும் பல உறுப்பினர்கள் ராஜாஜியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருந்தனர். ராஜாஜி நாட்டிற்கு செய்த பல்வேறு தொண்டுகளை மதிக்கும் வகையில் அவரது உருவப்படத்தினை கடந்த ஆகஸ்ட் 21, 1978-ல் அப்போதைய குடியரசுத் தலைவரான டாக்டர்.என்.சஞ்சீவி ரெட்டி திறந்து வைத்திருந்தார்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரியில் உள்ள தொரப்பள்ளியில் கடந்த டிசம்பர் 10, 1878-ல் ராஜாஜி பிறந்தார். தனது 93-வது வயதில்  டிசம்பர் 25, 1972-ல் அவர் மறைந்தார். சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர், வரலாற்றாளர், வழக்கறிஞர், எழுத்தாளர் எனப் பல துறைகளிலும் ராஜாஜி சிறந்து விளங்கினார்.

நம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை முதன் முதலில் பெற்ற தலைவர் ராஜாஜி. இவர், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தவர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x