Published : 29 Dec 2018 03:20 PM
Last Updated : 29 Dec 2018 03:20 PM
அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வளாகத்தில், முஸ்லிம்களுகாக இருபதிற்கும் மேற்பட்ட மசூதிகள் அமைந்துள்ளன. இதைபோல், இந்து மாணவர்களுக்கானக் கோயில்களும் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
உபியின் நொய்டாவில் கவுதமபுத்தர் மாவட்ட காவல்துறை சார்பில் பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வய சேவக்கினர் தம் ஷாக்காக்களை பொது இடங்களில் செய்யக் கூடாது என சில முஸ்லிம்கள் குரல் எழுப்பினர்.
இந்நிலையில், உபியின் 150 வருட கால அலிகர் முஸ்லிம் பல்கலைகழக வளாகத்தில் தொழுகைகள் நடத்த மசூதிகள் உள்ளன. இதுபோல், இந்து மாணவர்களுக்கான கோயில்களும் கட்டப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதை வலியுறுத்தி அதன் சட்டத்துறை மாணவர் அஜய்சிங் தன் பல்கலைகழக துணைவேந்தரான டாக்டர்.தாரிக்க் மன்சூருக்கு நேற்று கடிதம் எழுதியுளார். இவர், கடந்த வருடம் அதன் மாணவர் பேரவை தேர்தலில் முக்கியப் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அலிகர் பல்கலைகழகத்தின் சட்டத்துறை மாணவரான அஜய்சிங் கூறும்போது, ‘மத்திய அரசின் பல்கலைகழகம் என்பதால் அனைத்து மதத்தினரும் சமமாக பாவிக்க இந்த கோரிக்கை எழுப்பினேன். இங்கு என்னைப்போல் உள்ள இந்து மாணவர்களுக்கு பூஜை நடத்த எந்த கோயில்களும் இல்லை. இதற்காக, வளாகத்திற்கு வெளியே வெகுதூரம் போக வேண்டி உள்ளதால் நேரம்வீணாகிறது.’ எனத் தெரிவித்தார்.
அஜய்சிங்கின் கோரிக்கைக்கு உபியில் ஆளும் பாஜகவினரும் ஆதரவுக்குரல் எழுப்பி வருகின்றனர்.
இக்கட்சியின் இளைஞர் அமைப்பான அகில பாரத வித்யா பரிஷத்தின் அலிகர் மாவட்ட செயலாளர் முகேஷ் சிங் மங்கல் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்லார்.
அதில் முகேஷ், அலிகர் முஸ்லிம் பல்கலைகழக வளாகத்தில் சீக்கியர் மற்றும் கிறித்துவர்களுக்கும் என குருத்துவாரா மற்றும் தேவாலயங்களும் கட்ட வலியுறுத்தி உள்ளார். அலிகர் பல்கலையில் அனைத்து மதத்தை சேர்ந்த மாணவர்கள் சுமார் 37,000 பேர் கல்வி பயில்கின்றனர்.
இதில், முஸ்லிம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால், அங்கு இந்து, முஸ்லிம் பிரச்சனைகளை முன்னிறுத்தி அவ்வப்போது இருதரப்பினரின் போராட்டங்களும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT