Published : 28 Sep 2014 12:11 PM
Last Updated : 28 Sep 2014 12:11 PM
தீவிரவாதம், பிரிவினை வாதம் ஆகியவற்றை தடுத்து தேசத்தை காப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
மாதா அமிர்தானந்தமயியின் 61-வது பிறந்த நாள் விழா கேரள மாநிலம் கொல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:
தீவிரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களை நாடு எதிர்கொண்டுள்ளது. ஆனால் அவற்றை தடுப்பதில் மத்திய அரசு திறம்பட செயல்பட்டு தேசத்தைக் காப்பாற்றும்.
நாடு எதிர்கொள்ளும் பிரச்சி னைகளை எதிர்கொள்ள மாதா அமிர்தானந்தமயி போன்ற ஆன்மிகத் தலைவர்களின் ஆசி அவசியம். பொருளாதார வளர்ச்சி யில் மட்டுமன்றி ஆன்மிகத்திலும் இந்தியா வல்லரசாகி கொண்டிருக் கிறது.
உலகம் ஒரே குடும்பம் என்று நமது ஆன்மிகத் தலைவர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் உலகை வழிநடத்தும் ஆன்மிக சக்தியாக இந்தியா உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.
காஷ்மீருக்கு ரூ.25 கோடி
மாதா அமிர்தானந்தமயியின் பிறந்த நாள் விழாவில் அவரது மடம் சார்பில் காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.25 கோடி நிதி வழங்கப்பட்டது.
உத்தராகண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமிர் தானந்தமயி மடம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட் டுள்ளன. அதன் பயனாளிகளுக்கு வீட்டுக்கான சாவிகள் வழங்கப்பட்டன.
கேரள அமைச்சர்கள் சிவகுமார், பாலகிருஷ்ணன் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT