Published : 26 Dec 2018 10:29 AM
Last Updated : 26 Dec 2018 10:29 AM
முஸ்லிம்களின் முத்தலாக் முறை மீதான புதிய மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. திருத்தப்பட்ட இந்த மசோதா இருஅவைகளிலும் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வருடம் உச்ச நீதிமன்றத் தால் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டது. இதையடுத்து முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட் டது. ஆனால் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக மாநிலங் களவையில் நிலுவையில் இருந் தது. பிறகு மசோதாவில் மூன்று முக்கிய மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி மனைவி மற்றும் அவரது உறவினர்களுக்கு மட்டும் வழக்கு தொடுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. குடும்பச் செலவு மற்றும் மைனர் குழந் தைகள் மனைவி வசம் எனவும் மாற்றப்பட்டுள்ளது. பெண் தனது புகாரை மறுஆய்வு செய்யும் வகையில், முத்தலாக் கூறிய கணவருக்கு ஜாமீன் அளிப்பது குறித்து மாஜிஸ்திரேட் முடிவு செய்வார் என்பது மூன்றாவது திருத்தம் ஆகும்.
இதன் பிறகு முத்தலாக் மசோதா கடந்த செப்டம்பரில் அவசர சட்டமாக இயற்றப்பட்டது. இதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்காக மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இங்கு நிறைவேற்றப்பட்ட பிறகு மாநிலங்களவையில் வைக்கப்பட உள்ள புதிய மசோதா அங்கு நிறை வேறுமா என்ற கேள்வி எழுந்துள் ளது. ஏனெனில் பாஜக கூட்டணிக்கு மாநிலங்களவையில் பெரும் பான்மை இல்லை என்பதால் அதிமுக மற்றும் பிஜு ஜனதா தளத்தின் ஆதரவு தேவை. இதில் அதிமுக இந்த முறையும் முத்தலாக் மசோதாவை எதிர்க்கும் நிலைபாட்டில் உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அதிமுக சிறுபான்மை யினர் பிரிவு தலைவரும் மக்க ளவை உறுப்பினருமான அன்வர் ராசா கூறும்போது, “ஷரீயத் சட்டத்தில் அரசு தலையிடக் கூடாது என்பதால் இந்த மசோதாவையும் எதிர்ப்போம். கைதாகும் கணவருக்கு ஜாமீன் என்பதை தவிர பெரிய மாற்றம் எதுவும் இதில் இல்லை” என்றார்.
எனவே, மசோதா வாக்கெடுப் பின்போது அதிமுக, அவையில் இருந்து வெளியேறினால் அது மறைமுக ஆதரவாக கிடைத்து விடும். இதே நிலைப்பாட்டை பிஜு ஜனதா தளமும் எடுத்தால் முத்த லாக் மசோதா நிறைவேற்றப்பட்டு விடும். எனினும், எதிர்கட்சிகள் தொடர்ந்து வரும் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப் படாமல் நடைபெற்றால் தான் அது சாத்தியம் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT