Last Updated : 23 Dec, 2018 07:26 AM

 

Published : 23 Dec 2018 07:26 AM
Last Updated : 23 Dec 2018 07:26 AM

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் இடங்களை உடனடியாக நிரப்ப கோரிக்கை

உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருவருடங்களாக தமிழ் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதைஉடனடியாக நிரப்பும்படி பல்கலைகழக மாணவர் பேரவையினர் துணைவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

உ.பி.யின் அலிகரில் அமைந்துள்ள இது, இந்தியாவின் பழமையான மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இதில் தமிழில் பட்டங்கள் பெறும் வகையில் தமிழுக்கானப் பாடப்பிரிவும் உள்ளது.

கடைசியாக அதன் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் இருந்த முனைவர் து.மூர்த்தி கடந்தஅக்டோபர் 24, 2016-ல் காலமானார். இவரது மறைவுக்கு பின் தலைவராக வந்த மலையாள பேராசிரியர் ஏ.நுஜும் அப்பணியிடத்தை மாற்றி தன் மொழிக்கான உதவிப் பேராசிரியரை நியமித்துக் கொண்டார். இதனால், அங்கு தமிழ் கற்க விரும்பும் மாணவர்கள் அதற்கான வாய்ப்புகளை இழந்ததாகப் புகார்எழுந்துள்ளது. எனவே, மீண்டும் அப்பணியிடத்தில் தமிழ் பேராசிரியரை நியமிக்கும்படி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையின் நிர்வாக உறுப்பினரும் தமிழருமான கே.கவுதம், தம் துணை வேந்தரான டாக்டர் தாரீக் மன்ஜூருக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் கவுதம் கூறும்போது, “பேராசிரியர் இல்லாத மற்றொரு சோகமாக பாதுகாக்கப்பட்டிருந்த பல தமிழ் நூல்கள் துறையின் வராண்டாவில் குப்பைகளுடன் சிதறி வீணாகிறது. மத்திய பல்கலைக்கழகத்தில் ஒரு மாநிலத்தின் மொழி அவமதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் துணைவேந்தருக்கு கடிதம் எழுதினேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x