Published : 11 Dec 2018 12:20 PM
Last Updated : 11 Dec 2018 12:20 PM
டெல்லியின் 6 ஏ, தீன்தயாள் உபாத்யா மார்கில் உள்ள பாஜகவின் தலைமையகம் களையிழந்து காணப்படுகிறது. இதுபோல், கடந்த சில வருடங்களாக தேர்தல் முடிவு சமயங்களில் அங்கு விடியற்காலை முதலே அக்கட்சியின் தொண்டர்கள் குவிவது வழக்கம்.
கடந்த 2013 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் போது பாஜகவின் தலைமையகம் அசோகா சாலையில் இருந்தது. இது, புதிய விலாசத்தில் தீன்தயாள் மார்கிற்கு சில மாதங்களுக்கு முன் மாறியது.
ஆனால், அசோகா சாலையில் இருந்தது போல், பாஜகவின் புதிய அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தொண்டர்களைப் பார்க்க முடியவில்லை. பெரிய அளவில் பட்டாசு கொளுத்தி அமர்க்களப்படும் காட்சிகளும் இல்லை.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் அலுவலகம் வந்துள்ளனர். செய்தியாளர்கள் எண்ணிக்கையும் இன்று குறைந்து விட்டது. இதற்கு ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜகவின் இறங்குமுகம் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், பாஜக தலைமையகத்திற்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மதியம் மூன்று மணிக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது தலைமையில் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT