Last Updated : 21 Dec, 2018 10:02 AM

 

Published : 21 Dec 2018 10:02 AM
Last Updated : 21 Dec 2018 10:02 AM

‘‘போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்கு அதிக முக்கியத்துவமா? ’’ –நடிகர் நசிரூத்தீன்ஷா விளாசல்

நம் நாட்டில் சிலர், போலீஸாரின் உயிர் பலியை விட பசுவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பதாக பாலிவுட் நடிகர் நசீரூத்தீன்ஷா விமர்சனம் செய்துள்ளார். இதற்காக யார் பெயரையும் குறிப்பிடாத அவர் தனது கருத்தை இன்று யுடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.

 

இது குறித்து நசீரூத்தீன்ஷா தனது உரையில், ‘எனது குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஏனெனில், அவர்கள் எந்த மதம் குறித்த கல்வியை பெறுவதில்லை. நல்லது, கெட்டதும் ஒரு மதத்தினால் கிடைப்பதல்ல என நம்புவதால் அதை அவர்களுக்கு நாம் கற்பிக்க விரும்பியதில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் தனது கருத்தில், ‘நல்லது எது? கெட்டது எது? என்பதை நாம் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கற்றுத் தருகிறோம். நம்பிக்கை என்றால் என்ன என்பதையும் போதிக்கிறோம். ஒருநாள் அவர்களை பெருங்கூட்டம் சூழ்ந்து நீ இந்துவா? முஸ்லீமா? என கேள்வி எழுப்பினால் அவர்களிடம் பதில் கிடையாது.’ எனத் தெரிவித்தார்.

 

இதுபோன்ற சூழல் மாற்றும் நிகழும் சூழல் தெரியாதது தனக்கு மேலும் கவலை அளிப்பதாகவும் நசீரூத்தீன்ஷா கூறியுள்ளார். நேர்மையாக சிந்திப்பவர்களுக்கு கோபம் வர வேண்டும். ஆனால், அச்சம் வரக்கூடாது’ எனவும் குறிப்பிட்டவர், ‘இந்த நாடு எங்கள் வீடு. இங்கிருந்து யார் எங்களை விரட்ட முடியும்?’ எனக் கூறியுள்ளார்.

 

பெரும்பாலும் முற்போக்கான கருத்துக்களை கூறும் திரைப்படங்களில் நடிக்கும் நசீரூதீன்ஷாவின் இந்த கருத்து தேசிய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆம் தேதி உபியின் புலந்த்ஷெஹரில் பசுவதையை எதிர்த்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x