Last Updated : 04 Dec, 2018 09:27 AM

 

Published : 04 Dec 2018 09:27 AM
Last Updated : 04 Dec 2018 09:27 AM

சுங்கச்சாவடிகளால் தாமதமாவதை தவிர்க்க நடவடிக்கை: நாடு முழுவதிலும் மின்னணுப் பாதைகள்

சரக்கு மற்றும் சேவைக்கான ஜிஎஸ்டி வரி அறிமுகமான பின் நாடு முழுவதிலும் உள்ள சுமார் 440 சுங்கச்சாவடிகளில் சுங்கவரி செலுத்துவது நிறுத்தப்படும் எனக் கருதப்பட்டது.

ஏனெனில், ஜிஎஸ்டியில் அனைத்து வகையான வரிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதால் இந்த நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஏற்கெனவே சில சுங்கச் சாவடி களில் மின்னணுப் பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதை பாஸ்ட் டிராக் அட்டைகளை வைத்திருப்போர் கடக்கும் போது வரியானது டிஜிட்டல் முறையில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய சாலை மற்றும் வாகனப் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, ‘சுங்கச்சாவடிகளை மூடு வது தொடர்பான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாஸ்ட் டிராக் அட்டைகளுக்கான மின்னணுப் பாதைகளை அதிகப்படுத்துவது டன், குறைந்த தூரம் சாலையில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு மட்டும் வரியைக் குறைக்க திட்ட மிடப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தன.

சமீப ஆண்டுகளாக நெடுஞ் சாலைகளை அரசு மற்றும் தனியாருக்கு இடையிலான ஒப்பந் தப்படி (Build Operate Transfer) தனியார் நிறுவனங்கள் அமைத்து வருகின்றன. இத்திட்டத்தின்படி, 25 முதல் 30 வருடங்கள் வரை தாம் அமைத்த சாலையை பராமரித்து அதற்கான தொகையை அவர்களே வசூல் செய்ய வேண்டும். எனவே, சுங்கச்சாவடிகளை மூடினால் சாலைகளை அமைத்த நிறுவனங் களுக்கு மத்திய அரசு வருடத்திற்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும்.

சுங்கச்சாவடிகளில் இருந்து மத்திய அரசிற்கு வருடந்தோறும் சுமார் 1.2 லட்சம் கோடி ரூபாய் வசூலாகிறது. இதுமட்டுமல்லாமல் தனியாக ஒரு பங்கு அச்சாலையை அமைக்கும் தனியார் நிறுவனங் களுக்கும் செல்கிறது. இந்த தொகை உச்ச நீதிமன்ற வழக்கின் உத்தரவால் சமீபத்தில் குறைக்கப் பட்டது. அதில் 50 கி.மீ தொலை விற்கு ஒரே ஒரு சுங்கச்சாவடி மட்டுமே அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதால் பல சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன.

சுங்கச்சாவடிகள் மூடப்படுவ தாக சில மாதங்களுக்கு முன்பும் தகவல் பரவியது. அதை மத்திய சாலைப் போக்குவரத்து துறை செயலாளர் யுத்வீர் சிங் மல்லீக் மறுத்திருந்தார். சாலைகளின் வளர்ச்சியை தொடரவேண்டி இருப்பதால் வரி வசூலிப்பை நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேபோன்ற கருத்தை அத்துறையின் மத்திய அமைச்ச ரான நிதின் கட்கரியும் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x